77. நான் ஒரு கருவி
1897ம் ஆண்டு அமராவதி நகரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டுக்குப்பிறகு, கோகலேவும் ரானடேவும் இரயிலில் திரும்பி வந்துகொண்டிருந்தார்கள்.
அதிகாலை 4 மணி. கோகலே நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தார். திடீரென்று, யாரோ பாடுகின்ற குரல் கேட்டது. கோகலே கண்ணைத் திறந்து பார்த்தார். சற்றுத் தொலைவில் ரானடே அமர்ந்திருப்பதும், கைகளைத் தட்டியபடி பாடிக்கொண்டிருப்பதும் தெரிந்தது.
அன்றைக்கு ரானடே பாடிய பாடல்கள் மராட்டியக் கவிஞர், துறவி, சீர்திருத்தவாதி துக்காராம் எழுதியவை. அப்போது அவரிடம் எந்த இசைக்கருவியும் இல்லை; அவருடைய குரலைக்கூட இனிமையானது என்று சொல்வதற்கில்லை. ஆனால், அவர் அந்தப் பாடல்களைத் திரும்பத் திரும்பப் பாடிய விதம் கோகலேவுக்குச் சிலிர்ப்பூட்டியது. அவர் தன்னையும் அறியாமல் எழுந்து உட்கார்ந்தார், ரானடே பாடுவதைக் கூர்ந்து கேட்கலானார்.









Add Comment