79. நிறவெறி நாடகம்
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், தென்னாப்பிரிக்க இந்தியர்களின் உரிமைகளுக்காகப் போராடிக்கொண்டிருந்த காந்தியின்மீது இந்தியாவின், உலகத்தின் பார்வை அழுத்தமாக விழுந்தது. அதற்கு முதன்மைக் காரணமாக அமைந்தவர்களில் ஒருவர், அவருடைய அரசியல் குருவான கோகலே.
செல்லும் இடங்களிலெல்லாம் கோகலே காந்தியைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். அவருடைய முதன்மை நோக்கம் தென்னாப்பிரிக்க இந்தியர்களுடைய போராட்டத்தின்மீது வெளிச்சம் பாய்ச்சுவதும் அதற்கு ஆதரவு திரட்டுவதும்தான். ஆனால், அந்தப் போராட்டம் தகுதி மிக்க ஒருவரால் வழிநடத்தப்படுகிறது என்பதையும் உரக்கச் சொன்னால்தானே மக்களுக்கு நம்பிக்கை வரும்? அதனால்தான் கோகலே காந்தியின் பெயரைத் திரும்பத் திரும்ப அழுத்தமாக முன்வைத்தார்.
காந்தியின் வன்முறையற்ற போராட்ட முறையைக் கோகலே முற்றிலும் ஏற்றுக்கொண்டு பாராட்டினார், ‘ஒருவேளை, இந்த நேரத்தில் நாம் தென்னாப்பிரிக்காவில் இருந்திருந்தால், மிஸ்டர் காந்தியின் தலைமையின்கீழ் நம்மை இணைத்துக்கொண்டு போராடியிருப்போம், அவரோடு சேர்ந்து பணியாற்றியிருப்போம், இந்த உயர்ந்த நோக்கத்துக்காகத் துன்பத்தை எதிர்கொண்டிருப்போம்.’










Add Comment