82. தாழாத் தலைவர்
1912 நவம்பர் 17. கோகலே தன்னுடைய தென்னாப்பிரிக்கப் பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியாவுக்குப் புறப்பட்டார்.
கோகலேவைப் பிரிவது காந்திக்கு எப்போதும் வருத்தம்தான். ஆனால், இந்தமுறை அவர் மனத்தைத் தேற்றிக்கொள்வதற்கு ஒரு விஷயம் இருந்தது.
ஏனெனில், கோகலேவின் வருகை தென்னாப்பிரிக்கச் சத்தியாக்கிரகப் போராளிகளுக்குப் பெரும் ஊக்கத்தைக் கொடுத்திருந்தது. இந்தியர்களுடைய கோரிக்கைகள் தொடர்பாகத் தென்னாப்பிரிக்க அரசாங்கம் அவருக்குச் சில நல்ல வாக்குறுதிகளைக் கொடுத்திருந்ததால், தாங்கள் சரியான வழியில்தான் நடக்கிறோம் என்கிற கூடுதல் நம்பிக்கையை அவர்கள் பெற்றிருந்தார்கள்.










Add Comment