86. செர்ரிப் பழங்களுக்கு மயங்கியவர்
‘மருத்துவர் பேச்சைக் கேளுங்கள், அவர் சொல்கிற உணவுகளைச் சாப்பிடுங்கள்’ என்று கோகலே காந்திக்கு அறிவுரை சொன்னார். ஆனால், தனிப்பட்ட முறையில் அவரே மருத்துவர்களுடைய பேச்சைக் கேட்கிறவராக இல்லை.
கோகலேவுக்கு நீரிழிவு நோய் இருந்தது. அதனால், அவர் இதைத்தான் சாப்பிடவேண்டும், இதையெல்லாம் சாப்பிடக்கூடாது என்று மருத்துவர்கள் கண்டிப்பாகச் சொல்லியிருந்தார்கள். எனினும், பெரும்பாலான நேரங்களில் அவர் அந்தக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றமாட்டார், தான் விரும்புகிறபடிதான் சாப்பிடுவார்.
குறிப்பாக, தயிரும், தயிரைக் கொண்டு செய்யப்படுகிற ஶ்ரீகண்ட் என்ற இனிப்பும் கோகலேவுக்கு மிகவும் பிடித்தமானவை. ஶ்ரீகண்ட் சாப்பிடும்போதெல்லாம் கோகலே கவிஞராக மாறிவிடுவார், ‘இதற்கு இணையான இனிப்பு இந்தியாவில் வேறு எதுவும் இல்லை’ என்று புகழ்ந்து தள்ளுவார்.









Add Comment