9. மதிப்பெண்கள் சொல்லாத கதை
1881ம் ஆண்டு, பதினைந்து வயதான கோகலே தன்னுடைய பள்ளி இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றார். அவருடைய பொறுப்பான பல்லாண்டு உழைப்புக்கும் விடாமுயற்சிக்கும் கிடைத்த பரிசு அது.
கோகலே எவ்வளவு மதிப்பெண் வாங்கினார்? முதல் மாணவராக வந்தாரா? ஏதேனும் விருதுகளை வென்றாரா? செய்தித்தாள்கள் அவரைப் பேட்டி எடுத்தனவா? ‘நான் மருத்துவராவேன், மக்களுக்குச் சேவை செய்வேன்’ என்று அவர் பெருமையுடன் அறிவித்தாரா?
தொடக்கப் பள்ளியில் ஒரே ஒருமுறை இரண்டாம் மதிப்பெண் எடுத்ததற்காகச் சினம் கொண்டு புத்தகத்தைக் கிழித்து எறியும் அளவுக்கு முதலிடத்தின்மீது ஆசைப்பட்டவர் கோகலே. ஆனால், மேல்நிலைப் பள்ளியிலும் பின்னர் கல்லூரியிலும் அவர் அப்படித் தொடர்ச்சியாக முதல் வரிசையில் அமர்ந்ததாகத் தெரியவில்லை. நன்றாகப் படிப்பார்; நல்ல மதிப்பெண் வாங்குவார்; அதற்குமேல் ஏதும் சிறப்பாகச் சொல்வதற்கில்லை.










ஒரு netflix webseries-ஐப் போல இருக்கிறது. மாஸ்டர் sir நீங்க.