உலகம் உள்ளங்கைக்குள் வந்துவிட்டது. ஸ்மார்ட் ஃபோனிலேயே எல்லாமும் கிடைக்கிறது. ஆயினும் ஊர் சுற்றக் கிளம்பும் சுற்றுலா என்றாலே அனைவருக்கும் ஆனந்தம் தான்.
நாடுகள் கடந்து, கண்டங்கள் கடந்து பூமிப்பந்தின் எந்தவொரு புள்ளிக்கும் சென்று வருவது முன்பிருந்ததை விட எளிமையாகியிருக்கிறது. ஆகவே சுற்றுலாக்கள் பெருகியுள்ளன.
சுற்றுலா மாபெரும் வணிகமாக வளர்ந்துள்ளது. உலகின் ஒட்டுமொத்த ஜி.டி.பியில் சுற்றுலாவின் பங்கு எட்டு சதமானம். கடந்த ஆண்டில் மட்டும் இரண்டு கோடி புதிய வேலை வாய்ப்புகளைச் சுற்றுலாத் துறை உருவாக்கியுள்ளது. கொரோனாவை நாம் வெற்றிகொண்ட பின்னர் மீண்டும் அசுர வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது சுற்றுலாத் துறை. சுற்றுலா என்பது பயணிகளுக்கு இனிமையான அனுபவங்களை விற்கும் துறை. சொகுசாக, எந்தச் சிரமமுமின்றிச் சென்று வர வேண்டும் என்பதில் இளைய தலைமுறையினர் தெளிவாக உள்ளனர்.
நமது சுற்றுலா அனுபவத்தை மேலும் இனிமையாக்குவதற்கு பல்வேறு தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. டிஜிட்டல் டூரிசம் என்பது சுற்றுலாவை இனிமையாக்க நமக்கு உதவி செய்யும் அனைத்துத் தொழில்நுட்பங்களின் தொகுப்பு. டிஜிட்டல் டூரிசத்தில் சுற்றுலாவின் எல்லாச் செயல்பாடுகளையும் திட்டமிட சாப்ட்வேர்கள் உள்ளன.
நான்கைந்து நண்பர்கள் சேர்ந்து செல்லும் சுற்றுலாவில், எங்கே செல்வது என்று முடிவெடுப்பதுதான் பெரும் பிரச்சனை. இதை எளிமையாக்கத் தகவல் தொழில்நுட்பம் பெரிதும் துணை புரிகிறது.
last line is very lyrical sir