பாதுகாப்புக்காகச் செய்யப்படும் செலவுகள் அதிகம். நாடுகளானாலும் சரி. மென்பொருள் நிறுவனங்கள் ஆனாலும் சரி. என்னதான் ஆகச் சிறந்த வசதிகளை வழங்கினாலும், பாதுகாப்புக் குறைபாடுகள் இருந்தால் சாஃப்ட்வேர் தேறாது. இது ஆதியிலிருந்தே இருக்கும் நிலைதான். தற்போது செய்யறிவு வந்த பின்னர் கலவரங்கள் அதிகரித்துள்ளன...
Tag - அறிவியல்-தொழில்நுட்பம்
கடந்த சில வாரங்களில் உலகின் சில இடங்களில் விந்தையான நிகழ்வு நடந்திருக்கிறது. ஒரே நாளில் ஆயிரக்கணக்கில் புத்தகங்கள் விற்றுப் போயிருக்கின்றன. அயர்லாந்தில் ஒரு புத்தகக் கடைக்கு ஒரே நாளில் 5, 000 புத்தக ஆர்டர் வந்திருக்கிறது. ஐயாயிரமும் வெவ்வேறு நூல்கள். ஆனால் இவை யாரும் வாங்காத புத்தகங்கள். உதாரணமாக...
காலை எழுந்தவுடன் பேப்பர். இப்படியொரு தலைமுறை வாழ்ந்தது. சில செய்திகளை மேய்ந்துவிட்டு அவரவர் வேலைகளுக்குச் சென்று மகிழ்ச்சியாக இருந்தனர். பின்னர் இந்தச் செய்தி டோஸ் அதிகரித்தது. வானொலி வழிச் செய்திகள், தொலைக்காட்சிச் செய்திகள் என்று அவ்வப்போது அழைப்பு மணிகள் அடித்தன. இப்பரிணாம வளர்ச்சியின் அடுத்த...
இரவு பத்து மணியாகியும் அலுவலகத்தில் இருக்கும் ஒருவர், தனக்கு பிடித்தமான உணவை இணையதளத்தில் பார்க்கிறார். அதை ஆர்டர் செய்கிறார். உடனே, ‘சற்றுநேரத்தில் உணவு வீட்டை அடையும்’ என்ற அறிவிப்பு காட்டப்படுகிறது. அதோடு லைவ் ட்ராக்கிங் இணைப்பும் கிடைக்கிறது. இன்னும் இரண்டு நிமிடங்களில் வந்துவிடுவார், இதோ...
இன்ஸ்டாகிராமிலும் ஃபேஸ்புக்கிலும் சில நாட்களுக்கு முன்பு ஒரு விஷயம் ட்ரெண்ட் ஆனது. 1980களின் பாணி படங்கள் டைம்லைனில் உலவிக் கொண்டிருந்தன. ஆண்கள் பெல் பாட்டம் பேண்ட்டுகளிலும் பெண்கள் காலிஃப்ளவர் அளவிலான ரோசாப்பூவைக் கொண்டையில் சொருகியவாறும் போஸ் கொடுத்துக் கொண்டிருந்தனர். இதுபோன்று பொழுதுபோக்குக்காக...
ஏஐ ஒரு பணியாள். நாம் அதற்கிடும் கட்டளைகளை ‘செவ்வனே’ செய்து முடிக்கும். ஆனால் ஒரே ஒரு சிக்கல். கட்டளைகளில் அணுவளவும் குழப்பம் கூடாது. இரட்டுற மொழிதல் எல்லாம் கவிதையோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். ஏஐயிடம் ஆகாது. இன்றைய சாஃப்ட்வேர் டீம்களில் மனிதர்களோடு சேர்ந்து ஏஐயும் உழைக்கிறது. அதாவது...
இரவு நேரம். நகரின் மின் விளக்குகள் அணைந்திருக்கின்றன. ஆனால் தெரு இருளில் மூழ்கவில்லை. பூங்காவில் நிற்கும் மரங்கள் மெல்ல ஒளிர்கின்றன. பூக்கள் நீலமாகவும் பச்சையாகவும் தகதகக்கின்றன. பார்வையாளர்கள் வியந்து நிற்கின்றனர். இது அவதார் திரைப்படத்தின் பண்டோரா கோளமா? இல்லை. இது நாளைய உலகில் உங்கள் ஊரில் ஒரு...
‘நகையே அழுகை இளிவரல் மருட்கை அச்சம் பெருமிதம் வெகுளி உவகை’. இது தொல்காப்பியம். எட்டுவிதமான மெய்ப்பாடுகளைப் பட்டியலிடுகிறது. மெய்ப்பாடுகள் என்பன உள்ளத்தில் எழும் உணர்வுகள். உடலின் வழியாக வெளிப்படுவன. புரியும்படி சொன்னால் ‘எமோஷன்ஸ்’. மனிதகுலம் இரட்டை இன்ஜின்களால்...
நம் வாழ்வில் நாம் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு விலை உண்டு. ‘நீ என்னைக் காதலிக்கிறாயா?’ என்ற கேள்விக்கான விலை, ஒருவருடைய மொத்த வாழ்நாளாகவும் இருக்கலாம். அதேபோல் ChatGPT போன்ற மாடல்களிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கும் விலை உண்டு. இங்கே விலை எனக் குறிப்பிடப்படுவது மாடல்களின் சந்தா தொகை...
சாட் ஜிபிடி, ஜெமினி, கிளாட் போன்ற ஏஐ கருவிகளால் நாம் புத்திசாலி ஆகிறோமா, முட்டாளாகிறோமா? ஏஐ கருவிகள் புத்திசாலிகள் ஆவதால் நாம் முட்டாள்கள் ஆகிறோமா? ஏஐ, நம் படைப்பாற்றலை அழிக்கிறதா? ஏஐ கருவிகளைப் பயன்படுத்தலாமா, கூடாதா? இது போன்ற பல கேள்விகள் ஏஐ குறித்து நாள்தோறும் எழுப்பப்படுகின்றன. கற்பித்தலிலும்...













