கோகலேவுக்குக் காந்திமீது நம்பிக்கை வரவில்லை. ஆங்கிலத்தில் முழங்குவதைவிட, மராட்டியில் பேசுவதன்மூலம் மக்களை இன்னும் நெருங்கலாம் என்கிற கருத்து கோகலேவுக்குப் பிடித்திருந்தது.
Author - என். சொக்கன்
![]()
காந்தியும் தன்னுடைய குருநாதரை மீண்டும் பார்ப்பதற்கு மிகுந்த ஆவலுடன் இருந்தார். கோகலேவின் தென்னாப்பிரிக்கா வருகையை மிகச் சிறப்பாகக் கொண்டாடவேண்டும் என்று விரும்பினார்.
'ஒருவருக்கு எவ்வளவு வேலை இருந்தாலும் சரி, சாப்பிடுவதற்கு நேரம் ஒதுக்குவதைப்போல் உடற்பயிற்சிக்கும் நேரம் ஒதுக்கவேண்டும்' என்று கோகலேவைக் குறிப்பிட்டு எழுதினார் காந்தி.
நாட்டைப் பிரிவினைக்குட்படுத்தத் துடித்தவர்களிடையே, கோகலே 'இந்தியர்' என்கிற குடையின்கீழ் அனைவரும் ஒருங்கிணைவோம் என்று ஒற்றுமையை வலியுறுத்தப் போராடிக்கொண்டிருந்தார்.
கோகலேமீதான முதல் கொலை முயற்சி புனே நகரில் அவருடைய வீட்டில் நடந்தது. இதிலிருந்து கோகலே தப்பிவிட்டார் என்றாலும், இந்நிகழ்வு பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் உண்டாக்கியது.
கோகலேதான் திட்டம் போட்டுத் திலகரைச் சிறைக்கு அனுப்பிவிட்டார்' என்றுகூடப் பேசினார்கள். 'ராஷ்ட்ரமத்', பந்தே மாதரம்', 'இந்து பஞ்ச்' ஆகிய இதழ்களில் இதைப்பற்றிய கட்டுரைகள் வெளியாகின.
காங்கிரஸில் பிளவு இருப்பதுபோல் தெரியக்கூடாது என்று மூடி மறைப்பதற்குக் கோகலேவும் மற்ற தலைவர்களும் செய்த முயற்சி உண்மையிலேயே காங்கிரஸை இரண்டாகப் பிளந்துவிட்டது.
வேல்ஸ் இளவரசரை வரவேற்கும் தீர்மானம் ஒருமனமாக நிறைவேறவேண்டும் என்று கோகலே விரும்பினார். ஆனால், திலகர், லாலா லஜ்பத் ராய் முதலான தலைவர்கள் அதை ஏற்கவில்லை.
கோகலே தன்னுடைய உரையில் ஆங்கிலேயர்களின் ஆட்சியைக் கடுமையாகக் கண்டித்துப் பேசினார், வைஸ்ராய் கர்சன் பிரபுவின் ஆட்சியை ஔரங்கசீப் ஆட்சியுடன் ஒப்பிட்டார்.












