நம்பர் ஒன் ஆக வருவது எப்போதுமே நல்லது என்றில்லை. இலங்கை சில காலமாகவே பலவித பலான உலகத் தரப்படுத்தல்களில் முதலிடத்தைப் பிடித்து மானம் போய் நின்றது. நீண்ட காலத்திற்குப் பின்னர், இப்போது ஓர் உருப்படியான முதலிடம் கிடைத்திருக்கிறது. வழங்கியது “டைம் அவுட்” சர்வதேசச் சஞ்சிகை. உலகிலேயே, பெண்கள் தனியாகச்...
Author - ரும்மான்
குடைபிடித்து, செருப்புமணிந்த ஒரு பெண், கொழும்பின் பிரதான தெருவொன்றின் மீது நடந்து செல்கிறாள். அவளது கையில் ஒரு முட்டை. ஒளிப்படக் கருவியுடன் படப்பிடிப்புக் குழுவினர் பின்தொடர, முட்டையை நடு வீதியில் உடைத்து ஊற்றுகிறாள். சரியாக அறுபத்தி இரண்டு செக்கன்களில் முட்டை முற்றாகப் பொரிந்து வருகிறது...
நீலக் கொடி காட்டினால் என்ன பொருள்..? ‘நம்பி வரலாம்’ என்று அர்த்தம். அண்மையில் இலங்கையின் பன்னிரண்டு பிரதான கடற்கரைகள் நீலக் கொடி அங்கீகாரத்தைப் பெற்றுக் கொண்டுள்ளன. இந்தக் கொடி, சுற்றுலாத் தலங்களுக்கு, குறிப்பாக கடற்கரையோரங்களுக்குக் கிடைக்கும் சர்வதேச உத்தரவாதச் சின்னமாகும். சர்வதேசப் பயணிகள்...
இன்னும் எத்தனை மைல்கள் போக வேண்டுமென்று குத்துமதிப்பாகக்கூட யூகிக்க முடிவில்லை. வர வரக் குளிர் அதிகமாவது மட்டும் புரிந்தது. “தப்பு பண்ணிட்டோம்” “ஆட்டோக்காரனுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கப் போய் அனுபவிக்கிறோம்” “கூகிள் மாப் கைய விரிச்சிட்டுதா?” “அது நாம ஆரம்பிக்கிறப்பவே கப்சிப்” ஓரளவுக்கு சீனியர்ஸான...
ஒருவரை வேவு பார்ப்பதென்று முடிவெடுத்து விட்டால் மேலோட்டமாகச் செய்ய முடியாது. குறித்த நபரின் நடை, உடை, பாவனை, வாழ்க்கை வட்டம், இடுப்பின் சுற்றளவு இத்யாதிகள் அனைத்தையுமே பக்காவாக உள்வாங்க வேண்டும். பருவ வயதுக் காதலனைப் போலப் பின்னாலேயே இருந்து நோட்டம்விட வேண்டும். இப்படித்தான் 2012-ஆம் ஆண்டில்...
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக, வயது மூப்படைவதனைத் தடுக்கும் மருந்தொன்றை வெளியிட இருப்பதாக, கொழும்பு பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பல வருடகால ஆய்வு, தற்போது இறுதிக் கட்டத்தினை எட்டியிருப்பதாகவும், ஓரிரு மாதங்களில் இந்தப் புது மாத்திரைகள் சந்தைக்கு விடப்படும் என்றும் பல்கலைக்கழக இணையதளத்தில்...
நமது பூமியின் சரிபாதி அளவான செவ்வாய்க்கு ஏன் இத்தனை முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் அறிவியலாளர்கள்? செவ்வாயில் போய் குடியிருக்க வேண்டும் என்கிற திடசங்கற்பத்தோடு திரியும் எலான் மஸ்க் ஆக இருக்கட்டும், ஏனைய விண்வெளி ஆய்வு நிலையங்களாக இருக்கட்டும்…. அந்தக் கிரகத்தில் இங்கே இல்லாத எதனைக் கண்டார்கள்...
முற்றிலும் அறியப்படாத, புதியதொரு குண்டைத் தூக்கி ஒன்றும் ஜப்பான் மீது எறியவில்லை அமெரிக்கா. தெரிந்தேதான் செய்தார்கள் அந்தப் பயங்கரத்தை. முதலில், ஓர் அணுகுண்டைத் தயார் செய்தார்கள். அது எப்படி வெடிக்கும், எத்தனை சேதம் தரும் என்றெல்லாம் அப்போது சரியாகத் தெரிந்திருக்கவில்லை. ‘ட்ரினிட்டி’ என்கிற அந்த...
ஒரு தக்காளிப் பழம் காணாமல் போய்விட்டது. “என்னது, தக்காளியக் காணோமா?” தகவல், உலகச் செய்திகளின் பேசுபொருளாகிவிட்டது. விண்வெளியில் இயங்கும் ‘சர்வதேச விண்வெளி நிலையத்தில்’ பயிரிடப்பட்டு, அறுவடை செய்தெடுத்த அரும்பெரும் தக்காளிப் பழம் போன இடமே தெரியவில்லை. ஃப்ரான்க் ரூபியோ என்கிற விஞ்ஞானி , கிளி...
சீட்டுக் கட்டைகளை வரிசையாக அடுக்கி வைத்துவிட்டு,அதில் ஒன்றை லேசாகத் தட்டி விட்டால், அடுத்தடுத்து மொத்தமாக எல்லாம் சாய்ந்து விடும் இல்லையா.? இந்த ‘டாமினோ’ விளைவு உலக அரங்கிலும் நிகழ்ந்துவிடக் கூடாதென்று அமெரிக்காவுக்கு எப்போதுமே உள்ளூரப் பயம் இருந்தது. ஓரளவு முன்னேறி வரும் நாடுகளில் ஒன்று...