நீராலான நிலம்
எனக்கு முன்னால் இருந்த மேசையிலிருந்து நீல நிற வரைபடம் நழுவித் தரையில் விழுந்தது. அதை எடுக்க நான் குனிந்தபோது, எதிரே இருந்த இளைஞனும் அதேநேரத்தில் அதை எடுக்கக் குனிந்தான்.
‘மன்னிக்கவும், கவனிக்கவில்லை’ என்றேன் அதை அவனிடம் நீட்டியபடி.
‘பரவாயில்லை, இது பழைய வரைபடம். நான்தான் கவனமில்லாமல் புத்தகத்தை நகர்த்தினேன், அது நழுவிவிட்டது’ என்று பேசிக்கொண்டே அந்த வரைபடத்தை மேசையில் விரித்துச் சரிசெய்தான். அவன் சொன்னது போலவே அது மிகவும் பழைமையான காகிதம் போல் தெரிந்தது.
அவன் பெயர் காரிம். லிபியாவின் திரிபோலி நகரைச் சேர்ந்தவன். நீர்வளப் பொறியாளராகத் தற்போது துபாயில் பணியாற்றி வருகிறான். அவன் சிறந்த வாசகன் மட்டுமல்ல, அவ்வப்போது லிபியாவின் முன்னணிப் பத்திரிகைகளில் சுற்றுச்சூழல் மற்றும் நீர் மேலாண்மை குறித்துத் தொடர்ந்து எழுதியும் வருகிறான். அடுத்து எழுதப்போகும் கட்டுரைக்காக அந்தப் பழைய வரைபடத்தை ஆராய்ந்து கொண்டிருந்தான்.











Add Comment