‘டயானா கட்’ வெட்டிய இளம்பெண்ணொருத்தி ராயல்நீல நிறத் துணியில் நுணுக்கமான பல் வர்ண நூல் வேலைப்பாடுடன் கூடிய உயர்ரக சூட் ஒன்றை அணிந்து பாதையில் நடந்து செல்கிறாள். பாதசாரிகள் அத்தனை பேரும் திரும்பித் திரும்பிப் பார்க்கிறார்கள். அந்த ஆடையின் வசீகரம் ஊருக்கு மிகப் புதிதாக இருந்தது...
Author - ரும்மான்
![]()
“ஷாங்காய் விமான நிலையம் நோக்கிப் பயணமாகும் UL866 விமானத்தில் டிக்கட் பதிவு செய்திருக்கும் பயணி Mr.Macaca-வுக்கான இறுதி அழைப்பு இது. தயவுசெய்து பன்னிரண்டாம் இலக்க நுழைவாயிலை நோக்கி விரையவும்” மனைவி, பிள்ளைகளின் கைகளை இறுகப் பற்றியிருந்த மிஸ்டர் மகாகா எனும் குரங்கு மாமா, பெருமிதத்தோடு...
அதிகாலைக்குச் சற்று முன்னதான நேரம். இரவு முழுவதும் அந்தப் புனித ஸ்தலத்தில் தொழுது பிரார்த்தனை புரிந்திருந்த மக்கள், நோன்பு பிடிப்பதற்காக ஸஹர் உணவை உட்கொள்ளத் தயாராகக் காத்திருக்கின்றனர். ‘பள்ளிவாசலில் தரித்திருத்தல்’ என்பது ரமளான் மாதத்தில் இஸ்லாமியர்களின் ஒரு வழிபாட்டு வடிவமாகும்...
கொளுத்தும் வெயிலில் குழந்தைக்கு சுகமில்லாமல் போவதைப்போன்ற ஒரு கஷ்டம் இருக்கிறதா என்ன..? மொத்த வீடும், சில கணங்களில் அல்லோலகல்லோலப்பட்டு விடும். குறிப்பாகக் கோடைக் காலத்து இன்ப்லுவென்ஸாவோ, வியர்க்குருவோ, எது வந்தாலும் சரி, அசௌகரியத்தை சரியாகச் சொல்லத் தெரியாத குழந்தைகள் பெற்றோரைப் பாடாகப் படுத்தி...
நோன்பு பிறக்கிறது. உலகெங்கும் வாழும் இஸ்லாமியர்கள் பலத்த ஏற்பாடுகளுடன் நோன்பை வரவேற்கும் படலத்தில் இறங்கிவிட்டார்கள். நாட்டுக்கு நாடு, ஊருக்கு ஊர் விதம் விதமான தடபுடல்கள் இடம் பெற்றாலும், அடிப்படையில் அனைவரது நோக்கமும் ஒன்றே. பிறக்கும் இந்த மாதத்தில் தங்குதடைகளின்றி நோன்பு நோற்று, அருள் நிறைந்த...
“அடுத்ததாக, உங்களை மகிழ்விக்க வருகிறார்கள் திக்வெல்ல களிகம்பாட்டக் குழுவினர்” கணீரென ஒலிக்கிறது தொகுப்பாளரின் குரல். எட்டுப்பேர் கொண்ட குழு நடன நிகழ்ச்சி அது. ஒரு கை குறைந்தாலும் பிசகிவிடும். தலைப்பாகையும் பாரம்பரிய நடன அலங்காரமும் தரித்த இளைஞர்கள், கையில் வர்ணக் கோல்களுடன் ஒவ்வொருவராக...
‘சோபியா’ இளஞ்சிவப்பு வர்ணச் சேலை கட்டியிருந்தாள். கல்கத்தா நகரத்துக் கல்லூரி மேடையொன்றில் ஆரத்தி எடுக்கப்பட்டு அமோகமாக வரவேற்கப்படுகிறாள். அவளது முகம் மகழ்ச்சியில் பிரகாசிக்கிறது. கல்லூரியின் மாணவர்களைப் பார்த்து, “உங்களது முகங்களில் நம்பிக்கை தெரிகிறது! நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்”...
இலங்கையின் இளம் தலைமுறை பாஸ்போர்ட் ஆபீஸ்களின் வாசல்களில் நிற்கிறது. அல்லது விமானநிலைய டிபார்ச்சர் வரிசையில் பாஸ்போர்ட்டை ஏந்திக் கொண்டு நிற்கிறது. நிச்சயமற்ற எதிர்காலம், புரியாத அரசியல் குழப்பங்கள், என்றைக்குமே தீராத இனமுரண்பாடுகளுடன் மல்லுக்கட்டி எப்படியோ பிழைக்க முயன்றால் புதிதாய் விதித்து...
வருடந்தோறும், இல்லாமிய மாதக் கலண்டரில் ஆறாவது மாதமான , ஜமாதுல் ஆஹிர் மாத இறுதியில் ஆரம்பித்து, மாதம் முழுவதும் இடம் பெறுகிறது புகாரி கந்தூரித் திருவிழா. பின்னர் புனித நோன்பு மாதத்துக்கு முன்னைய மாதமாகிய ஷஃபான் மாதத்தின் முதல் பிறையில் அமோகமான விருந்துபசாரத்தோடு முடிவடைகிறது. ரமலான் நோன்பு வருவது...
டைம் மிஷினில் மூன்று வருடங்கள் பின்னோக்கி வந்து விட்டோமா என்பது போல இருந்தது அந்தக் கல்யாண விருந்து. ‘கையெழுத்துப் போட்டு இருவரும் சேர்ந்து வாழ்ந்தாலே போதும்’ என்று ஒரு சிறு விருந்துடன் நடந்து கொண்டிருந்த இப்போதைய திருமணங்களை ஒரு நிமிடம் மறக்கச் செய்தது இந்த வைபவம். மாப்பிள்ளை கை நிறைய...












