Home » Archives for சரண்யா ரவிகுமார்

Author - சரண்யா ரவிகுமார்

Avatar photo

ஆண்டறிக்கை

பணத்தைக் குப்பையில் போடாதே!

எனது எழுத்துப் பயணம் மெட்ராஸ் பேப்பரில் 2024இல் ஆரம்பித்தது. அந்த வருட ஆண்டறிக்கையில் இரண்டு முக்கிய இலக்குகளைப் பதிவிட்டிருந்தேன். ஒன்று, ஒரு புத்தகம் எழுதி முடிக்க வேண்டும். இரண்டாவது, மெட்ராஸ் பேப்பரில் என் கட்டுரையின் தரம் உயர வேண்டும். முதல் இலக்கை 2024 முடிவதற்கு முன்னரே முடித்து, புத்தகத்தை...

Read More
உலகம்

போதைப் பொருள் கடத்திய அதிபர்!

ஹோண்டுராஸ் நாட்டின் முன்னாள் அதிபர் ஹுவான் ஒர்லாண்டோ ஹெர்னாண்டெஸ். போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காக இவருக்கு அமெரிக்க அரசாங்கத்தால் நாற்பத்தைந்து வருடச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இது நடந்து ஒரு வருடம் ஆன நிலையில் சென்ற வாரம் பத்திரிகைகளில் முதல் பக்கத்தில் இவருக்குத் தனி வெளிச்சம்...

Read More
முகங்கள்

வாரன் பஃபெட்: எளிமையும் கருணையும்

ஆங்கிலத்தில் ஒரு பிரபலமான வாக்கியம் உண்டு. ‘I am going quiet’. அதாவது இனி பேசி எந்தப் பிரயோஜனமும் இல்லை. உலகப் பணக்காரர்களில் ஒருவரான, வார்ரென் பஃபெட் சென்ற வாரம் இதே வாக்கியத்தைப் பயன்படுத்தியுள்ளார், ஆனால் ஒரு புது அர்த்தத்தில். அறுபது வருடங்கள் ஷேர் மார்கெட்டிங் குருவாக, பணம்...

Read More
உலகம்

ரியோ டி ஜெனிரோ படுகொலைகள்

தென் அமெரிக்காவின் பிரேசில் நாட்டில் உள்ள முக்கிய நகரம் ரியோ டி ஜெனிரோ. பிரேசில் காபி போலப் போதைப்பொருள் கடத்தல் இங்கே சர்வ சாதாரணமானது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, போலிஸ் ஒரு மாபெரும் சோதனையை மேற்கொண்டது. விளைவு, ரியோ டி ஜெனிரோ தெருக்களில்130 பிணங்கள் குவிந்தன. இதில் அப்பாவி மக்களும்...

Read More
உலகம்

போதையிலிருந்து எண்ணெய்க்கு: ஒரு களேபரக் கடத்தல் காண்டம்

போதைப் பொருள் கடத்தலுக்குப் பெயர் போன மெக்சிகோ கார்டல்கள், இப்போது எரிபொருள் கடத்தலிலும் ஈடுபடுகிறது என்கிற செய்தி வெளிவந்துள்ளது. அதுவும் தனியாக இல்லை, ஒட்டிப் பிறந்த உடன்பிறப்பு போல உள்ள அமெரிக்காவின் உதவியுடன் இந்தக் கள்ளக் கடத்தல் நடந்து வருகிறது. மெக்சிகோவின் மேற்குப் பகுதியில் உள்ள சிறிய...

Read More
உலகம்

பல்லாண்டு வாழத்தான் வேண்டும்!

‘கிரிட்டோ’ (Grito) என்றால் ஸ்பானிய மொழியில் காதைக் கிழிக்கும் சத்தம் போடுவது என்று அர்த்தம். சுதந்தர தினத்தின் முந்தைய நாளன்று மெக்ஸிகோவின் அதிபர், மக்கள் முன் கோஷம் எழுப்புவது வழக்கம். இந்த நிகழ்வை கிரிட்டோ என்று அழைப்பார்கள். மெக்ஸிகோ சுதந்தரம் பெற்று இருநூறு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது...

Read More
உலகம்

புதைந்தாலும் அழியாத சரித்திரம்

தென் அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் பசிபிக் பெருங்கடலை அணைத்துக்கொண்டிருக்கும் நாடு பெரு. இங்கே லட்சத்துக்கும் அதிகமான தொல்லியல் களங்கள் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதனால் கீழடி போல இங்கே தொல்பொருள் ஆய்வாளர்கள் ஆய்வு செய்து கொண்டே இருப்பார்கள். அப்படிப்பட்ட ஓர் ஆய்வில், நாலாயிரம் வருடங்கள் பழமையான...

Read More
சுற்றுலா

சொர்க்கம் பாதி, நரகம் மீதி

வட அமெரிக்காவுக்கும் தென் அமெரிக்காவுக்கும் நடுவில் நீண்ட கழுத்துபோல் காட்சியளிக்கும் நிலப்பரப்புக்கு இஸ்துமஸ் என்று பெயர்  சூட்டியிருக்கிறார்கள். இப்பகுதியில் ஏழு நாடுகள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொண்டிருக்கின்றன. இந்நாடுகளை ஒன்றாக ‘மத்திய அமெரிக்க நாடுகள்’ என்று அழைக்கிறார்கள். இந்தக்...

Read More
சுற்றுலா

அமெரிக்காவில் ஒரு கைலாசா

மொலாசியா என்பது 37 பேர் கொண்ட ஒரு சிறிய நாடு. அதுவும் அமெரிக்காவில் நெவாடா மாநிலத்தில் உள்ள நாடு. சரியாகத்தான் படிக்கிறீர்கள். நாட்டுக்குள் ஒரு நாடு, அதற்குப் பெயர்தான் மைக்ரோ நேஷன். ‘இன்றிலிருந்து நான் கட்சி ஆரம்பிக்கிறேன்’ என்பது போல ஒரு நாடும் ஆரம்பிக்கலாம். கட்சியையாவது தேர்தல்...

Read More
சமூகம்

கொட்டிக் கவிழ்த்த முத்த மழை

Cold Play என்பது அமெரிக்காவில் புகழ்பெற்ற இசை நிகழ்ச்சி. இதில் லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு கோலாகலமாகக் கொண்டாடுவார்கள். நம் ஊரில் நடைபெறும் அனிருத் இசைக்கச்சேரி போல என்று  வைத்துக்கொள்ளலாம். இந்தக் கூட்டத்தில் ஆண்ட்ரி பிரையன், கிறிஸ்டின் கேபாட் என்ற ஜோடி ஆடலும் பாடலுமாகக் கட்டி அணைத்து ஆட்டம்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!