Home » கொட்டிக் கவிழ்த்த முத்த மழை
சமூகம்

கொட்டிக் கவிழ்த்த முத்த மழை

Cold Play என்பது அமெரிக்காவில் புகழ்பெற்ற இசை நிகழ்ச்சி. இதில் லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு கோலாகலமாகக் கொண்டாடுவார்கள். நம் ஊரில் நடைபெறும் அனிருத் இசைக்கச்சேரி போல என்று  வைத்துக்கொள்ளலாம். இந்தக் கூட்டத்தில் ஆண்ட்ரி பிரையன், கிறிஸ்டின் கேபாட் என்ற ஜோடி ஆடலும் பாடலுமாகக் கட்டி அணைத்து ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தார்.

அரிசியில் கல்லைக் கண்டுபிடிப்பது போல, கோல்டு பிளே ஃபோட்டோகிராபர் அந்தக் கூட்டத்தில் இந்த ஜோடியைச் சரியாக படம் பிடித்து விட்டார். அதுவும் அங்கே உள்ள பெரிய புரொஜெக்டர் ஸ்கிரீனில் இவர்களின் கும்மாளம் காண்பிக்கப்பட்டது. தங்கள் ஃபோட்டோவை அவ்வளவு பெரிய திரையில் பார்த்ததும்,  ஆண்ட்ரி அவசரஅவசரமாகக் கீழே ஒளிந்து கொண்டார். கிறிஸ்டின் வெட்கப்படுவது போல முகத்தை மறைத்துத் திரும்பிக்கொண்டார். இதனைப் பார்த்த கோல்டு பிளே குழுவின் பாடகர் கிறிஸ் ‘இவர்கள் வெட்கப்படுகிறார்கள், இல்லை கள்ளக்காதலர்களாக இருக்க வேண்டும்” என்று பொத்தாம்பொதுவாகச் சொல்லிவிட்டார்.

பதினேழு நொடிகள் நீடித்த இந்த வீடியோ, சென்ற வாரம் இன்ஸ்டா, டிக் டாக், நியூஸ் சேனல்கள் என்று எல்லா இடங்களிலும் பற்றி எரிந்தது. இதில் இரண்டு முக்கியமான, வேடிக்கையான விஷயங்கள் உள்ளன. ஒன்று, கோல்டு பிளே பாடகர் சொன்னது போல இவர்கள் இருவரும் கள்ளக்காதலர்களே. இருவருக்கும் தனித்தனியே குடும்பம், பிள்ளைகள் உண்டு.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!