Home » Archives for சிகரம் பாரதி

Author - சிகரம் பாரதி

Avatar photo

உலகம்

வரலாற்றின் வானொலி சாட்சி

இலங்கை வானொலி நூறு ஆண்டுகளைக் கடந்திருக்கிறது. ஆல் இண்டியா ரேடியோவை விடப் பதினோரு ஆண்டுகள் மூத்தது ரேடியோ சிலோன் என அழைக்கப்பட்ட இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம். ஆசியாவின் முதல் வானொலி இலங்கை வானொலிதான். அதனால்தான் அன்னை வானொலி என்று மக்கள் இன்றும் இதனை அன்போடு அழைத்துக் கொண்டிருக்கிறார்கள்...

Read More
ஆண்டறிக்கை

செயலில் வாழ்தல்

2025 ஜூலை 06. எப்போதும் போல ஒருநாளாக அன்றைய தினம் இருக்கவில்லை. ஆசான் பாராவுக்கு அனுப்பிய மின்னஞ்சலொன்றுக்கு அவரிடம் இருந்து பதில் வந்திருந்தது. எட்டே சொற்கள்தான். ‘இது வாட்ஸப் இலக்கம். வாருங்கள், பேச வேண்டும்.’ பொதுவாக மின்னஞ்சல் கணக்கை நான் அடிக்கடி பரிசோதிப்பதில்லை. ஆகவே அன்று...

Read More
உலகம்

இலங்கைப் பேரிடர்: மீள்வது எப்படி?

அறுநூற்றுக்கும் மேற்பட்ட உயிரிழப்புகள். இருபது லட்சத்துக்கும் அதிகமானோருக்குப் பாதிப்பு. ஆயிரக்கணக்கான வீடுகள் அழிவடைந்துள்ளன. பல கிராமங்கள் மண்ணில் புதையுண்டுள்ளன. பெரும்பாலான நகரங்கள் நீரில் மூழ்கின. மக்களின் சொத்துக்கள் அழிவடைந்தன. பள்ளி மாணவர்களின் புத்தகங்கள், நோட்டுகள், கல்விச் சான்றிதழ்கள்...

Read More
உலகம்

டிட்வா பேரழிவு – இலங்கையிலிருந்து நேரடி ரிப்போர்ட்

2004ஆம் ஆண்டு சுனாமியினால் இலங்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அதன் பிறகு ஓரிரு தடவைகள் இலங்கை பாரிய வெள்ள அனர்த்தங்களை எதிர்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். ஆனால் முழு இலங்கையும் ஒருசேரப் பாதிக்கப்பட்டது இதுவே...

Read More
உலகம்

இரவில் முளைக்கும் புத்தர்!

இலங்கைக் குடியரசில் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். பௌத்த சாசனத்தைப் பாதுகாப்பதும், பேணி வளர்ப்பதும் அரசாங்கத்தின் கடமை. இது இலங்கை அரசியலமைப்பின் இரண்டாவது அத்தியாயம். பௌத்தமே எல்லாவற்றுக்கும் மேலானது என்று இதனூடாக நிறுவப்படுகிறது. அதாவது பௌத்த மதத்திற்கு அரசியலமைப்பில் தனி இடம்...

Read More
உலகம்

மீள முடியாத உலகம்

இனங்களுக்கிடையிலான மோதல், அதிகாரப் போட்டி, யுத்தம் என 75 ஆண்டுகளாக இலங்கை சீரழிந்திருக்கிறது. கடந்த காலங்களில் பிடிக்காதவர்களை ஒழித்துக் கட்டுவதற்காகவும், பிரச்சினைகளைத் தூண்டி விடுவதற்காகவும் அடியாள் வைத்துக் கொள்ளும் கலாசாரம் இருந்தது. முக்கியமாக, யுத்த காலத்தில். அடியாட்கள் கட்டளையிடுபவரின்...

Read More
ஆன்மிகம்

பிக்குவாக வாழ்வது: ஒரு தேரரின் அனுபவங்கள்

இலங்கை அரசியலைத் தீர்மானிக்கும் மிக முக்கிய சக்திகளுள் புத்த பிக்குகளும் அடங்குவர். ஆனால் எல்லா பிக்குகளும் அரசியல் ஆர்வலர்கள் அல்லர். எளிய துறவு வாழ்வு மேற்கொண்டு, பிட்ஷை எடுத்து உண்டு, நற்சொல் பேசி வாழும் பிக்குகள் அநேகர். அத்தகைய அமைதி பிக்குகளின் வாழ்க்கை எப்படி இருக்கும்? மாளிகாவத்தை போ செவன...

Read More
புத்தகக் காட்சி

கொழும்பு புத்தகக் கண்காட்சி 2025 – நேரடி விசிட்

கொழும்பு சர்வதேசப் புத்தகக் கண்காட்சி 2025 கோலாகலமாக ஆரம்பித்திருக்கிறது. கொழும்பு பண்டாரநாயக்க நினைவு சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் எட்டுக்கும் மேற்பட்ட அரங்குகளில், 400க்கும் மேற்பட்ட விற்பனைக் கூடங்களில் மாபெரும் ஜனத்திரளுக்கு மத்தியில் இம்முறை கண்காட்சி தொடங்கியிருக்கிறது செப்டம்பர் 26 ஆரம்பமான...

Read More
உலகம்

கச்சத் தீவா, கன்னித் தீவா?

இலங்கையின் அதிபர் ஒருவர் முதல் முறையாகக் கச்சத்தீவு மண்ணில் கால் பதித்திருக்கிறார். த.வெ.க தலைவர் கச்சத்தீவு பற்றி கருத்து சொன்னதால்தான் உடனடியாக அனுர அங்கே போனாரா? இல்லை ஏதாவது திட்டமிட்ட பயணமா? இப்படிப் பல கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்திருக்கின்றன. அப்படி எல்லாம் இல்லை, இது சாதாரணப் பயணம்தான்...

Read More
உலகம்

இலங்கை இன்று: பத்து மாத ப்ரோக்ரஸ் கார்ட்

மக்களுக்கு இருக்கக்கூடிய ஒரே அதிகாரம் வாக்குச்சீட்டு மட்டும்தான். யாரையாவது வாக்களித்துத் தெரிவு செய்துவிட்டால் அவராகப் பதவியைக் காலிசெய்து போகும்வரை பேசாமல் வாயை மூடிக் கொண்டு இருக்க வேண்டியதுதான். எந்தளவு ஜனநாயக நாடு என்றாலும் இதுதான் நிலைமை. மக்கள் புரட்சி, புடலங்காயெல்லாம் எப்போதாவது...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!