Home » ஐந்தில் ஒருவரும் அதிர்ச்சியளிக்கும் நிலவரமும்
குற்றம்

ஐந்தில் ஒருவரும் அதிர்ச்சியளிக்கும் நிலவரமும்

குடி குடியைக் கெடுக்கும். மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு. இப்படியெல்லாம் திரைப்படங்கள் ஆரம்பிக்கும் முன்னர் எச்சரிக்கை அறிவிப்புகள் காண்பிக்கப்படுகின்றன. சிகரெட் பெட்டிகளின் முன்பக்கத்தின் எண்பது சதவீதம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவரின் நிலைமை காண்பிக்கப்படுகிறது. ஆனால் சிகரெட் வாங்கும்போது அது உடைந்துவிடாமல் இருக்க ‘அண்ணா பெட்டி குடுங்க’ என்று அதைத்தான் மறக்காமல் வாங்கிக் கொள்கின்றனர்.

ஒரு சம்பவம். இலங்கையின் கண்டி மாவட்டம். நாவலப்பிட்டி என்ற நகரை அண்மித்த கிராமம். கூகுளில் தேடிப் பாருங்கள். நாவலப்பிட்டியில்தான் எம்.ஜி.ஆர் பிறந்தார். பெருமைமிகு மண்தான். பொங்கல் தினம். எல்லோரும் அன்றைய நாளை மகிழ்ச்சியாகக் கழித்தனர். அந்த ஏழு வயது சிறுமி உட்பட. பொங்கல் கொண்டாட்டங்கள் இரவானபோது அடுத்த கட்டத்தை அடைந்தன.

அந்தச் சிறுமியை அழைத்துக் கொண்டு அவளது பெற்றோர் தமது வீட்டிலிருந்து நூறு மீட்டர் தூரமுள்ள மற்றுமொரு வீட்டுக்கு சென்றனர். உறவினர் வீடுதான் என்பதால் அந்தச் சிறுமிக்குத் தயக்கம் ஏதும் இருக்கவில்லை. பார்ட்டி ஆரம்பமானது. சிறுமியின் தந்தையும் மற்றைய இருவரும் பார்ட்டியில் கலந்து கொண்டனர்.

ஏதோ ஒரு காரணத்துக்காக வீட்டிலிருந்து வெளியே வந்த சிறுமியை ஆதரவாக ஒரு கரம் அணைத்தது. அந்தக் கரம் பார்ட்டியில் தன் தந்தையுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்த ஒருவருடையது என்பதால் சிறுமி அச்சமின்றி நின்றாள். வா, உனக்கு ஒன்றைக் காண்பிக்கிறேன் என்று அவன் அழைத்தான். அவளும் பிஞ்சு மனத்துடனேயே அவனுடன் சென்றாள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!