Home » நீ வேறு, நான் வேறு – 50
நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 50

50. புயலுக்கு முன்

ஜியா உல் ஹக்கின் காலத்தில் பலூசிஸ்தான் விடுதலை இயக்கங்கள் இருக்கும் இடம் தெரியாமல் அடங்கி ஒடுங்கி இருந்ததைப் பார்த்தோம். அதற்கான காரணங்களையும் கண்டோம். பெரும்பாலான போராளிக் குழுத் தலைவர்கள் ஆப்கனிஸ்தானுக்குப் போய்விட்டது மிக முக்கியமான காரணம். அங்கே அவர்களுக்கு முகாம் அமைத்துக்கொள்ள முடிந்தது, பயிற்சி மேற்கொள்ள முடிந்தது, வெளி உலகத்துடன் தொடர்புகொள்ள முடிந்தது – இவை எல்லாமே உண்மைதான். அனைத்துக்கும் அப்பால் இன்னொரு காரணம் உண்டு.

பாகிஸ்தான் பார்க்காத ஆட்சிக் கலைப்பில்லை; ராணுவப் புரட்சியில்லை; ராணுவ ஆட்சியாளர்கள் இல்லை. ஆனால் அந்நாட்டின் சரித்திரத்தில் அம்மக்கள் ஜியாவுக்கு அஞ்சியதைப் போல இன்னொரு தலைவருக்கு அஞ்சியதில்லை. இந்த அச்சம் பலூச்சி விடுதலை இயக்கத்தினருக்கும் இருந்தது என்று சொன்னால் பொதுவாக ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அவர்கள் மொழியில் அச்சம் என்பது மடமையடா பாட ஆரம்பித்துவிடுவார்கள். உண்மையில் அது அச்சம்தான். என்னதான் அவர் பலூசிஸ்தான் போராளிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்கினாலும், பறிமுதல் செய்த சொத்துகளைத் திருப்பிக் கொடுத்தாலும், ராணுவத்தைத் திரும்ப அழைத்துக்கொண்டாலும் அந்த அச்சம் அப்படியேதான் இருந்தது. எந்தக் கணமும் இந்த மனிதர் சீறலாம், வெடிக்கலாம் என்கிற அச்சம்.

ஜியா செய்த காரியங்கள் அப்படிப்பட்டவை. பாகிஸ்தானை அவர் இஸ்லாமிய மயமாக்கும் முயற்சியில் மிகத் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தார். எளிதாகப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் இப்படிச் சொல்லலாம். ஆப்கனிஸ்தானில் முதல் முறை தாலிபன் ஆட்சிக்கு வந்தபோது என்னவெல்லாம் செய்தார்களோ, அதையெல்லாம் பாகிஸ்தானில் நடைமுறைப்படுத்த ஆரம்பித்தார். ஒவ்வொரு நாளும் ஒவ்வோர் அறிவிப்பு வரும். திடீரென்று பெண்கள் விளையாட்டுகளில்-போட்டிகளில் பங்கேற்கத் தடை என்றொரு அறிவிப்பு வந்தது. வேலைக்குப் போகும் பெண்களுக்கு மிகக் கடுமையான நிபந்தனைகளுடன் கூடிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. பாகிஸ்தானில் வசித்து வந்த சிறுபான்மை மதத்தினரின் பாதுகாப்பு கிட்டத்தட்ட இல்லாத நிலைமைக்கே சென்றது. குறிப்பாகக் கிறித்தவர்களும் இந்துக்களும் ஜியா காலத்தில் அங்கே சொல்லொணாத் துயரங்களை அனுபவித்தார்கள். வட மேற்கு எல்லை மாகாணம், பஞ்சாப் போன்ற பிராந்தியங்களில் அரசுக்கு எதிராக முணுமுணுத்தவர்கள் அத்தனை பேரையும் விசாரணையே இல்லாமல் காணாமலாக்கினார்கள். அனைத்துக்கும் உச்சம், அஹ்மதியா முஸ்லிம்கள், இஸ்லாமியர்களே இல்லை; மாற்று மதத்தவர்கள் என்று அறிவித்துக் கொத்துக் கொத்தாகக் கொன்றது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!