Home » மெலனி வடிவமைத்த வெற்றி
அறிவியல்-தொழில்நுட்பம்

மெலனி வடிவமைத்த வெற்றி

ஆண்டு 2024, இடம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் புகழ்பெற்ற யூட்யூப் அரங்கம்.

ஒரு வெளிநாட்டு செயலியின் முதல் அமெரிக்க ஆண்டு விழா. வந்திருந்த மூவாயிரத்திற்கும் அதிகமான பெரும் நிறுவனங்களின் அதிகாரிகளின் மனங்களைக் கவர வேண்டிய சவால். தற்போது வரை தங்களுக்குத் தேவையான வரைகலை வடிவமைப்பு (கிராஃபிக் டிசைன்) மென்பொருள்களை அமெரிக்க சிலிக்கான் பள்ளத்தாக்கு நிறுவனங்களிடம் இருந்து வாங்குபவர்கள்.

பொதுவாக இது போன்ற நிகழ்ச்சிகளில் மென்பொருளின் பொறியியல் சிறப்புகளை மணிக்கணக்காக எடுத்துரைப்பார்கள். அப்படியில்லாமல் திடீர் என்று மேடையில் ஒரு சுயாதீன இசைக்கலைஞர் தனது குழுவோடு ராப் இசையைப் பாடி ஆடுகிறார். எல்லோரும் இது பொழுதுபோக்கு என நினைக்கையில் செயலின் சிறப்புகளை ஒவ்வொன்றாகப் பாடல் வரிகள் பட்டியல் இடுகிறது. இசையும் ஆட்டமும் வந்திருந்தவர்கள் அனைவரையும் தாளம் போட வைக்கிறது. நிகழ்ச்சி வெற்றி. அதோடு அந்த நாள் முழுவதும் உலகளவில் 25 லட்சத்திற்கு அதிகமானோர் இந்த வீடியோவை பார்த்து சமூகத் தளங்களில் பகிர்ந்தார்கள்.

இப்படித் தங்களின் விற்பனை உத்திகளை மாற்றி யோசித்த நிறுவனம் ஆஸ்திரேலியாவின் கான்வா (Canva). இதன் நிறுவனர் மெலனி பெர்கின்ஸ் (Melanie Perkins). “வாழ்வதற்குச் சிறந்த நகரங்கள்” பட்டியலில் முன்னணியில் இருக்கும் பெர்த் நகரில் 1987ஆம் ஆண்டு, இரண்டு சகோதரர்களுக்கு அடுத்துப் பிறந்தார் மெலனி. இவரின் தாயார் ஒரு ஆசிரியர். மலேசியரான தந்தை பிலிப்பைன் மற்றும் இலங்கை வம்சாவளியைக் கொண்ட ஒரு பொறியாளர். அண்ணாக்கள் இருவருமே நினைத்ததை உடனடியாக அழகாக வரையக் கூடியவர்கள். இசையிலும் சிறந்து விளங்கியவர்கள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!