Home » சந்திரா அத்தை
சிறுகதை

சந்திரா அத்தை

சந்திரா அத்தை காலமாகி விட்டாளாம். திடீரென வலிப்பு வந்ததால் கீழே விழுந்து பின்மண்டையில் அடிப்பட்டு மரணம் என்றாள் அம்மா. ‘உன்கிட்ட இப்போ சொல்ல வேண்டாம்னுதான் நெனச்சேன், நீ அவ பின்னாடியே சுத்திண்டு இருப்பியே, அத்தை செல்லமாச்சே நீ, என்னால சொல்லாம இருக்க முடியலடி’ என்றாள். எனக்கு மூச்சுத் திணறுவது போல் இருந்தது. பதில் பேசவே முடியவில்லை.

‘ஏம்மா இப்படி’என ஏதோ சொல்லத் தொடங்கினேன். மேலே பேச்சு எழும்பவில்லை. ‘பானு நீ அழாதடி, அவ ஆயுசு முடிஞ்சிடுத்து. நாம என்ன செய்ய முடியும்’ என்ற அம்மா தொடர்ந்து, ‘முடிஞ்சா காலையில எடுக்கறதுக்குள்ள வந்துடுடி’ என்றாள். நான் பேசாமல் இருக்கவும், ‘திரும்பவும் சொல்றேன் பானு, ரொம்ப அலட்டிக்காத. இனிமேலாவது அவ நிம்மதியா இருக்கட்டும். அவ புண்ணியாத்மாடி, நேரே சொர்க்கம்தான். அடுத்த பிறவியே அவளுக்குக் கிடையாது, நீ கவலைப்படாதே என்ன, முடிஞ்சா வரப் பாரு, சரியா? நானும் அப்பாவும் உடனே கிளம்பறோம்’ என்று அம்மா பேசி முடிக்கும் முன் தொடர்பைத் துண்டித்தேன்

அப்படியே தொப்பென சோபாவில் அமர்ந்தேன். ‘அவளுக்குப் பிறவியே கிடையாது…’ அம்மாவின் குரல் காதில் ஒலித்தது. இந்தப் பிறவி மட்டும் அவளுக்கு இருந்ததா என்ன, எத்தனை கஷ்டப்பட்டு விட்டாள் பாவம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • Natarajan Panchanatham says:

    பா. ரேவதி அவர்களின் மெட்ராஸ் பேப்பரில் வந்த முதல் கதை ஒலி.
    மெட்ராஸ் பேப்பரில் கதை வந்துவிட்டால். தரம் உறுதியாகிவிட்டது என்று பொருள் என்று அப்போது எழுதினேன். அதை உறுதி செய்துவிட்டது இவ்வார சிறுகதை சந்திரா அத்தை. உறவுகள் எத்தனை இருந்தாலும்
    அதில் ஏதோ ஒன்று நம்மை வெகுவாக ஈர்த்து விடும். அது போல் அந்த உறவும் நம்மை இறுக்கிப் பிடித்துக் கொண்டேயிருக்கும். கதையை நேர்த்தியாக கொண்டு சென்று அழகாக முடித்திருக்கிறார். பா.ரேவதி அவர்கள் மேலும் சிறப்பான கதைகளை வழங்க வாழ்த்துகள்!

    பாபநாசம் நடராஜன்

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!