சிமெண்ட் நிற இன்னோவா கார் மெதுவாக வந்து அருகில் நின்றது. டிரைவர் சீட்டில் அமர்ந்திருந்தவர் கண்ணாடியை இறக்கிக் கேட்டார்.
‘ண்ணா… இங்க வேங்கடேச பெருமாள் கோவில்?’
உள்ளே எம்.எஸ்ஸின் குரலில் லலிதா ஸகஸ்ர நாமம் முழங்கிக் கொண்டிருந்தது. ஏசியின் குளுமை முகத்தை வருடியது.
‘தோ, பத்து தப்படிதான். காரை இப்படி ஓரமா போட்டுக்கோங்கோ. அங்க இடமிருக்காது.’
பூட்டிய வீட்டு வாசலின் முன்னால் காரை பார்க் பண்ணுவதற்கு உதவினான் ரகு. முன்புறத்திலிருந்து இறங்கிய இளைஞர்கள் இருவரும் சிவந்த நிறம், சராசரி உயரம், தடிமன், ரிம்லெஸ் கண்ணாடி என பந்தலில் கட்டிய வாழை மரங்கள் போல் ஒரே மாதிரி இருந்தனர். கன்னங்கள் சற்று உப்பி, தொந்தி துருத்திக் கொண்டிருந்தவன் அண்ணனாக இருக்கலாம். பின் கதவைத் திறந்து விட்டான் தம்பி.















Add Comment