இந்தியாவின் அடையாளம் பன்மைத்துவம். வேற்றுமையில் ஒற்றுமை. இங்கு பேசப்படும் பல்வேறு மொழிகளும், இந்தியாவின் பரந்துபட்ட கலாசாரப் பெருமையின் அடையாளங்களே. அலுவல் மொழிகள் மட்டுமே இருபத்தி இரண்டு. இதுபோக ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படும் சீர்மிகு தேசம் நம் பாரதம்.
இந்திய மொழிகள் பலவும் மிகவும் தொன்மை வாய்ந்தவை. அதே வேளையில் இன்றைய டிஜிட்டல் உலகிலும் அவை முத்திரை பதித்த வண்ணம் உள்ளன.
மொழிகளின் டிஜிட்டல் உலகப் பயணத்தை மூன்று பெரும் பாகங்களாகப் பிரிக்கலாம். இப்பயணத்தின் முதலடி கணினியில் உள்ளீடு செய்யும் வண்ணம் மென்பொருள் உருவாக்கம். இரண்டாவது படிநிலை இணையம் வந்தபின் அது சார்ந்த வளர்ச்சி. மூன்றாவது இன்றைய ஏ.ஐ யுகத்தில் இம்மொழிகளின் பங்கு. ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
Add Comment