Home » ‘இடைத்தேர்தல் புகழ்’ ஈரோடு கிழக்கு – ஒரு ரவுண்ட் அப்
தமிழ்நாடு

‘இடைத்தேர்தல் புகழ்’ ஈரோடு கிழக்கு – ஒரு ரவுண்ட் அப்

மீண்டும் ஓர் இடைத்தேர்தலைச் சந்திக்கிறது ஈரோடு கிழக்குத் தொகுதி. கடந்த டிசம்பர் மாதம் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலக் குறைவினால் காலமானார். அதனைத் தொடர்ந்து பிப்ரவரி ஐந்தாம் தேதி டெல்லி சட்டமன்ற தேர்தலுடன் சேர்த்து ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலையும் நடத்துகிறது இந்தியத் தேர்தல் ஆணையம். ஆக இரண்டாவது முறை. கள நிலவரம் அறிய மெட்ராஸ் பேப்பர் சார்பாகத் தொகுதியை வலம் வந்தோம்.

2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பாகப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திருமகன் ஈவேரா வெற்றி பெற்றார். சட்டமன்ற உறுப்பினர் மட்டுமின்றி, தங்களை தனித்து வெளிக்காட்ட அரசியல் கட்சியின் முக்கியமான உறுப்பினர்களுக்கு சில அடையாளங்கள் தேவைப்படுகின்றன. அவர்களைச் சுற்றி நான்கைந்து கரை வேட்டி அணிந்த உறுப்பினர்கள் இருக்க வேண்டும். SUV கார் உபயோகிக்க வேண்டும். இப்படியான எந்த அடையாளங்களும் இல்லாத ஒரு சட்டமன்ற உறுப்பினராக இருந்தார் திருமகன் ஈவெரா. உள்ளூர் போக்குவரத்துக்கு ஒரு ஸ்கூட்டர் பயன்படுத்தினார். அவரைச் சுற்றிக் கரை வேட்டி ஆள்கள் இருக்கமாட்டார்கள். ஐந்தாண்டுகளை பூர்த்தி செய்திருந்தால் ஒரு முன் மாதிரி சட்டமன்ற உறுப்பினராகத் திகழ்ந்திருப்பார். இரண்டு ஆண்டுகள் முழுமையடைவதற்குள் திருமகன் ஈவெரா மாரடைப்பால் காலமானார்.

அவர் காலமானதைத் தொடர்ந்து 2023ஆம் ஆண்டு இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்தியாவின் ‘விலையுயர்ந்த’ இடைத்தேர்தலாக அந்தத் தேர்தல் இருந்தது என்பதை அனைவரும் அறிவார்கள். பணப்பட்டுவாடாவைக் கண்டறிய இந்தியத் தேர்தல் ஆணையக் குழு நேரில் சென்றது. ஆனாலும் ஆதாரத்துடன் கண்டறிய முடியவில்லை.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!