Home » Gen Z : ஒரு தலைமுறையின் கதை – 2
Gen Z தொடர்கள்

Gen Z : ஒரு தலைமுறையின் கதை – 2

இன்ஃப்ளூயன்ஸா

“எங்கடா கிளம்பிட்ட… தலைல என்ன, எண்ணெய்யா?” அர்ஜுன் போட்டிருந்த உச்சிக் குடுமி பளபளவென மின்னுவதைப் பார்த்துக் கேட்டார் சிவகாமி.

“அது எண்ணெய் இல்ல… சீரம்னு எத்தனை வாட்டி சொல்றது? சரி நான் இன்ஃபுளூயன்ஸர்ஸ் மீட்டுக்குப் போறேன். வர லேட்டாகும்.”

“இன்ஃபுளூயன்ஸாவா? சளி, ஜலதோஷத்துக்குப் பேருதானே அது?” சீரியல் பார்த்துக் கொண்டிருந்த பாட்டி கியூரியஸாகக் கேட்டார்.

“அய்யோ பாட்டி… சோஷியல் மீடியால பாப்புலரா இருக்கறவங்களுக்குப் பேரு இன்ஃபுளூயன்ஸர்ஸ். அவங்க பேசறது, டிரஸ் பண்ணிக்கறது, சாப்பிடறது எல்லாமே டிரெண்ட் ஆகும்.”

“ஏற்கெனவே அதைப் பார்த்துப் பார்த்துத்தான் சன்ஸ்கிரீன், சீரம்னு கண்டதை வாங்கி காசைக் கரியாக்கிட்டிருக்க… இப்ப அங்க வேற போய் என்ன பண்ணப் போற?” கவலையாகக் கேட்டார் அம்மா.

“இது வேற லெவல்மா… அங்க போனா நிறையா ஃபோட்டோ எடுக்கலாம், ரீல்ஸ் போடலாம். மத்த இன்ஃபுளூயன்ஸர்ஸோட கொலாப் பண்ணலாம். ஃபாலோயர்ஸ் கவுண்ட் கன்னாபின்னான்னு ஏறும். அப்டி ஏறினா கம்பெனிஸ் எல்லாம் அவங்க பொருளை ஃப்ரீயா கொடுப்பாங்க. அதை எப்படி யூஸ் பண்ணறதுன்னு வீடியோ போட்டுப் பணமும் சம்பாதிக்கலாம்.”.

“முதல்ல படிச்சு முடிக்கற வழியைப் பாருடா… அப்றம் சம்பாதிக்கறதைப் பத்திப் பேசுவ…”

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!