விடுமுறையை உருவாக்குபவள்
முதுகுப்பையில் உடைகளுடன் சேர்த்து லேப்டாப்பையும் உள்ளே திணித்தாள் நித்யா.
‘ஃபிரண்ட்ஸோட சேர்ந்து வெக்கேஷன் போறேன்னு சொன்ன. இந்தச் சனியனையும் எதுக்கு தூக்கிட்டுப் போற?’
‘வெக்கேஷன் இல்லம்மா… வொர்க்கேஷன்னு சொன்னேன்.’
‘என்ன கருமாந்திரமோ… மூணு மாசத்துக்கு ஒருதடவை பையைத் தூக்கிட்டுக் கிளம்பிட வேண்டியது. நாம ஒண்ணும் சொல்லிட முடியாது. சொன்னாலும் கேட்கப்போறது கிடையாது. இதெல்லாம் எங்க போய் முடியப்போகுதோ…’ புலம்பிக்கொண்டே உள்ளே போனார் நித்யாவின் அம்மா.
கோடை விடுமுறையில் குடும்பத்தோடு மட்டுமே சுற்றுலா சென்று கொண்டிருந்தவள்தான் நித்யா. ஸ்டார்ட்-அப் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தபிறகு அது போன்ற நீண்ட விடுப்புகள் கிடைப்பதில்லை. புராஜெக்ட், டெட்லைன், கால்ஸ், ஸ்டாண்டப் கூட்டங்கள் என்று வேலை அவளை முழுதாக விழுங்கிக் கொண்டிருந்தது.














Add Comment