4. சீர்திருத்தங்களும் சிதைவுகளும்
டான்சிமாத் சீர்திருத்தங்கள் நடைமுறைக்கு வந்தன. கொள்கை அளவில் நல்ல திட்டங்களாக இருந்தாலும், நடைமுறையில் பல புதிய பிரச்சனைகளைக் கொண்டுவந்தன.
ஜசியா வரி நீக்கம், அனைவருக்கும் சமமான சட்டங்கள் போன்ற அறிவிப்புகள் இஸ்லாமியர்களைக் கொந்தளிக்கச் செய்தன.
அதுவரை மில்லட் அமைப்பு பிற மதத்தவருக்கும் உரிமைகளை அளித்தாலும், இஸ்லாமியர்களே ஓட்டோமானின் முக்கியப் பிரஜைகளாக இருந்தனர். இஸ்லாமியர்களின் ஆதிக்கம் பாதிப்புக்குள்ளாகும் என்பதால் அவர்கள் அச்சட்டங்களை முற்றாக வெறுத்தனர்.










Add Comment