8. இரண்டாம் உலகப்போரும் விடுதலையும்
இரண்டாம் உலகப்போரைத் தொடங்கியிருந்தார் ஹிட்லர். ஆஸ்திரியா, போலந்து, டென்மார்க், நெதர்லாந்து என ஒவ்வொரு நாடாக ஜெர்மனி விழுங்கிக் கொண்டிருந்தது. பின் ஃபிரான்ஸை நோக்கித் தன் படைகளைத் திருப்பியது. வலிமை வாய்ந்த நாஜி ராணுவத்தை ஃபிரான்ஸால் எதிர்கொள்ள முடியவில்லை. பாரீஸ் நகரமும் ஃபிரான்ஸின் வடக்குப் பகுதிகளும் ஜெர்மனியின் வசம் வந்தன.
ஆனால் சிரியாவின் மீது எந்த உரிமையும் கோரவில்லை ஜெர்மனி. அரேபியாவில் காலனிகளை அமைப்பது ஹிட்லருக்கு வீண் வேலையெனப் பட்டது.









Add Comment