அமெரிக்க வரலாற்றில் ‘முதல் பெண்மணி’ என்பது வழக்கமாக அதிபரின் மனைவியைக் குறிக்கும். ஆனால் ஒரே ஒரு முறை மட்டும் அந்தப் பதவி ஒரு மருமகளுக்குக் கிடைத்தது. அவள்தான் ஹாரியட் லேன். அமெரிக்காவின் பதினைந்தாவது அதிபர் ஜேம்ஸ் புக்னேனின் அன்பு மருமகள், அவரது வளர்ப்பு மகள், வெள்ளை மாளிகையின் வண்ண விளக்கு.
1830 மே 9 அன்று பென்சில்வேனியாவின் மெர்சர்ஸ்பர்க் நகரில் பிறந்தாள் ஹாரியட் ரெபேக்கா லேன் (Harriet Lane). ஏழு குழந்தைகளில் ஆறாவது பெண். பத்து வயதிலேயே பெற்றோரை இழந்துவிட்டாள். தன் விருப்பப்படி தனக்கு மிகவும் பிடித்த மாமாவான ஜேம்ஸ் புக்கேனனை (James Buchanan) சட்டப்பூர்வப் பாதுகாவலராக நியமிக்கும்படி கேட்டுக்கொண்டாள் சிறுமி ஹாரியட். அன்று விதைக்கப்பட்ட உறவு, பிற்காலத்தில் வரலாற்றை மாற்றியது.
புக்கேனன் அன்றிலிருந்து அவளுக்குத் தந்தையாக, வழிகாட்டியாக, ஆசிரியராக மாறினார். தனியார் பள்ளிகளில் அவளுக்குச் சிறந்த கல்வி வழங்கினார். இறுதியாக, ஜார்ஜ்டவுனில் உள்ள விசிடேஷன் கான்வென்ட் பள்ளியில் இரண்டு ஆண்டுகள் படிக்க வைத்தார். பதினெட்டு வயதில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்வு பெற்றாள் ஹாரியட்.















Add Comment