Home » அநீதிக்கு நீதி
நம் குரல்

அநீதிக்கு நீதி

சாத்தான்குளம் தந்தை-மகன் காவல்நிலைய இரட்டைக் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒன்பது காவல்துறையினருக்கு நீதிமன்றம் தூக்குத் தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது. கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகாலம் நடைபெற்ற இந்த வழக்கில் இப்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் மொபைல் ஃபோன் கடை நடத்தி வந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும், அப்போதிருந்த கொரோனா காலத் தடையை மீறி கடையைத் திறந்து வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு போலிசாரால் காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 2020 ஜூன் 19ஆம் தேதி நடைபெற்ற இந்த சம்பவத்தன்று இரவு முழுவதும் அவர்களைக் காவல்நிலையத்தில் வைத்து அடித்துச் சித்திரவதை செய்ததால் அவர்களுக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டன.

அந்த நிலையிலும் அவர்களை கோவில்பட்டி சிறையில் அடைத்துள்ளனர். அங்கு அவர்களுடைய உடல்நிலை மோசமானதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இருவரும் அடுத்தடுத்த நாட்களில் மரணமடைந்தனர். இச்சம்பவம் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதிலும் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!