ஹாபி என்றால் பொழுது போக்கு. சிலருக்கு இது ஒரு வாழ்க்கை முறையாகவே இருக்கும். கொடுத்து வைத்தவர்கள். அதுவல்ல சங்கதி.
பொழுதுபோக்குக்கென்றே ஒரு திருவிழா நடந்தால் எப்படி இருக்கும்?
சென்னை எக்மோர் மியூசியம் வளாகத்தில் ஜூன் 19 முதல் 21ஆ ம் தேதி வரை அப்படியொன்று நடைபெற்றது. இதை காந்தி உலக அறக்கட்டளை (GANDHI WORLD FOUNDATION) நடத்தியது. இதில் 77 அரங்குகளும், 50 வகையான சேகரிப்புப் பொருள்களும் இருந்தன. இதில் கலந்து கொள்ள தமிழகம் முழுவதிலிருந்தும் நூற்றுக்கணக்கான சேகரிப்பாளர்கள் வந்திருந்தனர். துபாயிலிருந்து கூட ஒருவர் வந்திருந்தார்.
அஞ்சல்தலை சேகரிப்பு (ஃபிலடெலி), நாணயச் சேகரிப்பு (நாணயவியல்), பழங்காலப் பொருட்களைச் சேகரித்தல் போன்றவை பொதுவாக எல்லோராலும் அறியப்படும் பொழுதுபோக்குகள். இவற்றைத் தாண்டி எதனையும் அதன் மகிமை மாறாமல் சேகரிக்கலாம் என்பதை இந்தக் கண்காட்சி நிரூபித்தது.
கண்காட்சியில் ஆரம்பகால வடிவத்திலிருந்து இன்றைய பேங்கிங் வரை ஹார்லிக்ஸ் பெட்டிகள், பண்டைய காலக் கல் ஆயுதங்கள், கல்லில் செய்த ஆபரணங்கள், பல்வேறு எடைக் கருவிகள், செப்பு உலோகப் பாத்திரங்கள், நான்கு இருக்கைகளும் நான்கு பெடல்களும் கொண்ட சைக்கிள், அழகும் பயன்பாடும் சற்றும் குறையாத சாரட்டு வண்டிகள் என்று பல விஷயங்களும் காட்சிப்படுத்தப்பட்டுக் காண்பவரைப் பரவசப்படுத்தின.
















Add Comment