ஐடி நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றிய இளம்பெண் ஒருவர் தற்போது ஆட்டோ ஓட்டுநராக இருக்கிறார்.
‘ஒன்பது ஆண்டுகள் முன்னணி நிறுவனமொன்றில் மேலாளராக வேலை பார்த்தேன். அழுத்தம், மன உளைச்சலுடன் எப்போதும் பதற்றமாகவே இருக்கும். எனவே அந்தப் பணியைத் துறந்துவிட்டேன். இப்போது மன நிம்மதியுடன் இருக்கிறேன். மேலும் மாதம் அறுபதாயிரம் வரை சம்பாதிக்கிறேன்’ என்று பேட்டியளித்த அந்த இளம்பெண் குறித்த செய்தி பரவலாகப் பகிரப்பட்டது. ஐடி ஊழியர்கள் ஆர்கானிக் விவசாயம் செய்வதும், டெலிவரி பார்ட்னராக இணைவதும் சமீப காலங்களில் அடிக்கடி கேள்விப்படும் செய்திகளாக ஆகிவிட்டன.
பிரம்மாண்டக் கண்ணாடி மாளிகைகள், லட்சங்களில் சம்பளம், சொகுசு கார்கள், இன்பச் சுற்றுலாக்கள் எனப் பார்ப்பதற்குப் பளபளப்பான கனவு உலகமாகத் தெரிகிறது தகவல் தொழில் நுட்பத்துறை. அதற்குள் இருப்பவர்கள் ஏன் வெளியேறத் துடிக்கின்றனர்? கனவுகளுடன் நுழைபவர்கள் அவர்களை அந்தத் துறை என்னவாக மாற்றுகிறது?
















Add Comment