பிரபல பிரிட்டிஷ் நடிகர் இட்ரிஸ் எல்பா ஆப்பிரிக்காவிற்குச் சென்று இனிமேல் வாழ்க்கையை நடத்தப் போவதாக அறிவித்துள்ளார். ஓய்வெடுக்க அல்ல, திரைப்பட நகரை உருவாக்கப் போகிறார்.
கிழக்கு ஆப்ரிக்காவில் உள்ள சியாரா லியோன் நாட்டை சேர்ந்த தந்தைக்கும், அதே கிழக்கு ஆப்ரிக்காவில் உள்ள கானா நாட்டை சென்ற தாய்க்கும் பிறந்தவர் இட்ரிஸ் எல்பா. தனது திறமையால் முன்னேறி காகேஷியன்ஸ் நடுவில் கறுப்பின ஆணழகனாகக் கொடிகட்டிப் பறக்கும் இவர் இப்படியொரு அறிக்கை விட்டது மிகப் பிரபலமாகப் பேசப்பட்டு வருகிறது. கோல்டன் குளோப் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்ட இட்ரிஸ் எல்பா, மூன்று பஃப்தா விருதுகளுக்கும், ஆறு எம்மி விருதுகளுக்கும் சொந்தக்காரர்.
ஜேம்ஸ் பான்ட் தெரியாத திரைப்பட ரசிகர் இருக்க முடியாது. ஜேம்ஸ் பான்ட் கதாபாத்திரத்தை விரும்பாத கலைஞர்களும் இருக்க முடியாது. ஜேம்ஸ் பான்ட் 007, இயான் பிளெமிங் என்னும் எழுத்தாளரால் உருவாக்கப்பட்ட கற்பனை கதாபாத்திரம். பிரித்தானிய இரகசியச் சேவையின் உளவாளி ஜேம்ஸ் பான்ட். அந்த ஜேம்ஸ் பான்ட் கதாபாத்திரம் எப்படி இருக்க வேண்டும் என்று விரிவாக எழுதியுள்ளார் பிளெமிங். அந்த வர்ணனை வெள்ளை இனத்தவர்களுக்கு மட்டுமே பொருத்தமுள்ள கதாபாத்திரம். ஆனால் எல்பா ஜேம்ஸ் பான்ட் கதாபாத்திரத்திற்குப் பரிந்துரைக்கப்பட்டார். பரிந்துரையைத் தாண்டி வாய்ப்பாக மாறவில்லை. தன்னுடைய வாய்ப்பு, வாழ்க்கையைவிடப் பெரிதாக யோசிக்க முடிவெடுத்துவிட்டார் போல.
Add Comment