Home » ஹாய் சிரி! அர கிலோ சின்ன வெங்காயம் சொல்லு!
இன்குபேட்டர்

ஹாய் சிரி! அர கிலோ சின்ன வெங்காயம் சொல்லு!

தினசரி பயன்படுத்தப்படும் மளிகைப் பொருட்களை எப்படி வாங்குகிறோம் என்று முதலில் பார்ப்போம். எமது பெற்றோர்களின் காலத்தில் அம்மா வீட்டில் என்னென்ன பொருட்கள் தேவை என்று பட்டியலிட்டுக் கடைக்குப் போய் வாங்குவார். அல்லது அப்பாவிடம் வாங்கி வரும்படி கொடுப்பார். அக்காலத்தில் குளிர்சாதனப் பெட்டி என்ற ஒன்று இல்லாததால் தேவைக்கு அதிகமாக வாங்க முடியாது. காய்கறிகள் பழுதாகி விடும். உணவு அன்றாடம் சமைத்துத்தான் உண்ண வேண்டும். உணவுப் பொருட்கள் போலவே மற்றைய தினசரி பயன்படுத்தும் பொருட்களை நாம் தேவை வரும்போது பட்டியலிட்டுக் கடைக்குப் போகும் போது வாங்குவார்கள். கடைக்குப் போய் பொருட்கள் வாங்குவதும் வாரத்தில் பல தடவைகள் செய்யும் வேலை.

எமது காலத்தில் வீட்டில் குளிர்சாதனப் பெட்டி உள்ளது. வாரம் முழுமைக்குமான காய் கறிகளை வாங்கிக் குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதன் மூலம் அவற்றின் ஆயுட்காலத்தை நீட்டிக்கிறோம். அது மட்டுமல்லாமல் எஞ்சிய உணவுகளையும் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து மறுநாளோ அல்லது அதற்கும் அடுத்த நாளோ மைக்ரோவேவில் மீண்டும் சூடாக்கிச் சாப்பிடுகிறோம். சில குடும்பங்களில், முக்கியமாக மேற்குலக நாடுகளில் வாழும் குடும்பங்களில் இருவரும் முழுநேரப் பணியில் இருப்பதால் வந்து சமைத்துத் தருவதற்கு ஆளுதவி இல்லை. அதனால் திட்டமிட்டே சமையல் செய்யும்போது சில நாட்களுக்குச் சேர்த்துச் சமைத்துக் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கிறோம். இதற்கு எப்போது பொருட்களை வாங்க வேண்டும்? ஒரேயடியாக ஒரு வாரத்துக்குத் தேவையான பொருட்களை வாங்கலாமா? என்பது எமது பொருள் வாங்கும் செயல் முறையில் மாற்றத்தைக் கொண்டு வருகிறது. கடைக்குப் போக வேண்டிய தேவையின் எண்ணிக்கை குறைந்து விட்டது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!