23. ஜாலியன் வாலாபாக்
உலகப் போர் பின்னணியில், இந்திய அரசியல் சூழல் குறித்து காந்திஜி எழுதிய கடிதத்தை வைஸ்ராய் சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை. அவரது தென்னாப்ரிக்க சத்தியாக்கிரக முறைப் போராட்டம், அதற்கு ஓரளவுக்குக் கிடைத்த பலன் போன்றவற்றைக் கூர்ந்து கவனித்த ஆங்கிலேய அரசாங்கம், காந்திஜி இந்தியா திரும்பியதை “தென்னாப்ரிக்க அரசாங்கத்துக்குத் தலைவலி போய்விட்டது; பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்துக்கு இனிமேல் திருகுவலிதான்” என்று கருதினார்கள்.
Add Comment