Home » நேரம்
இலக்கியம் கதைகள்

நேரம்

விமலாதித்த மாமல்லன்


டெலிபோன்ஸில் வேலைபார்த்த ஹைதராபாத் பெரியப்பா கட்டிய வீட்டின் கிருகப்பிரவேசத்திற்காக, பாண்டிச்சேரியிலிருந்து வந்தபோதுதான் நரஹரி முதல் முறையாக செண்ட்ரல் ஸ்டேஷனைப் பார்த்தது. மேலே கூரை இருந்தாலும் அவ்வளவு பெரிய திறந்தவெளியை, பள்ளியில் படித்துக்கொண்டிருந்த அவன் அதுவரை பார்த்ததில்லை. அப்போது உண்டான செண்ட்ரல் ஸ்டேஷனின் பிரமிப்பு, பதவி உயர்வு மாற்றலில் குன்னூரில் வேலை பார்க்கையில் ஆறேழுமுறை வந்து வந்து போனதில் அடங்கி, எதையும் பார்க்காமல் எல்லோரையும் போல விறுவிறுவென நடந்துபோகத் தொடங்கியதில் சகஜமாகிவிட்டிருந்தது. ஒன்பதே மாதங்களில் குன்னூரிலிருந்துத் திரும்ப மெட்ராஸுக்கு மாற்றலாகி வந்துவிட்டதால் கடந்த ஒன்றரை இரண்டு ஆண்டுகளில், மெட்ராஸின் வரலாற்றுத் தலமான  செண்ட்ரலுக்குப் போகவேண்டிய அவசியமே வரவில்லை. ஆனால், குன்னூரில் யூடிசியாகச் சேர்ந்து, அந்த மாத இறுதியிலேயே செண்ட்ரலுக்கு வர நேர்ந்த பயணம், முக்கியமான வரலாற்று நிகழ்வாக அமைந்துவிட்டது.

குன்னூருக்குப் போய்ச் சேர்ந்தவன், நண்பனின் நண்பனான, தந்தி ஆபீஸில் வேலை பார்த்த  ஜோசஃப் ஜேக்கப் தயாளனின் அறையிலேயே தங்கிக்கொண்டான். அது எங்கோ மலை உச்சியில் இருந்தது. வாசலையும் கொல்லைக் கதவையும் திறந்து வைத்தால் பஞ்சுப் பொதிபோன்ற வெண்மேகங்கள் விருந்தாளிகள்போல  வந்துவிட்டுப்போயின.

போன ஏழெட்டு நாட்களிலேயே கிறிஸ்துமஸ் வந்தது. அதுவும் வெள்ளிக்கிழமையாகப் பார்த்து வந்தது. வியாழன் லீவ் போட்டால் சனி ஞாயிறு சேர்ந்து, ஒரு நாள் லீவில் நான்கு நாட்கள் மெட்ராஸில் இருக்கலாம்; மெட்ராஸுக்கு முன்னால் மேகமெல்லாம் எம்மாத்திரம் என்று 24ஆம் தேதிக்கு CL எழுதிக் கொடுத்துவிட்டு 23 மாலையே கிளம்பிவிட்டான். ட்ரெய்ன் போய்விடுமே என்கிற பரபரப்புக்கிடையில், கம்பெனிக்கு எதையோ செய்ய அனுமதி அளிக்கிற கடிதத்தை என்ன ஏதென்று படித்துக்கூடப் பார்க்காமல் இருப்பதை அடித்து, டிஓஎஸ் சூப்பிரெண்டெண்ட் என்று இனிஷியல் பெற்று, ஏசியிடம் கையெழுத்து வாங்கி கம்பெனிக்காரரிடம் கொடுத்துவிட்டுக் கிளம்பும்போது நேரமாகிவிட்டது. தாளமுடியாமல் ‘ட்ரெய்ன் போய்ட்ருக்கும்’ என்று வாய்விட்டே புலம்பிவிட்டான்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!