இது கடிதம் அல்ல, ஆனால் கடிதங்களைப் பற்றிய கதை. கடிதங்கள் உலகையே மாற்றும் சக்தி கொண்டவை என்பது நமக்குத் தெரியுமா?
பழைய காலத்தில் அரசர்களுக்கிடையே கருத்துப் பரிமாற்றத்திற்கு ஓலைச்சுவடிகள் பயன்பட்டன. பிறகு கடிதங்கள் அந்த இடத்தை எடுத்துக் கொண்டன. மார்ட்டின் லூதர் கிங் சிறையில் இருந்து எழுதிய கடிதம் போன்ற சில கடிதங்கள் வரலாற்றையே மாற்றக்கூடியவை. நேரு தன் மகளுக்கு எழுதிய கடிதங்கள் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளன.
பனிப்போருக்குப் பிறகு, அமெரிக்காவிலும் ரஷ்யாவிலும் 700க்கும் மேற்பட்ட பெண்கள் கடிதத் தோழிகளாக மாறினர். இந்த அழகான நட்புறவு ஆரம்பத்தில் அரசாங்கத்தால் ஊக்குவிக்கப்பட்டாலும், பின்னர் தனிப்பட்ட உறவாகவும் வளர்ந்தது.
இப்போது சமீபத்தில் நடந்த ஒரு சுவாரசியமான சம்பவம். மெலானியா டிரம்ப், ரஷ்ய அதிபர் புதினுக்கு எழுதிய கடிதம் உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. அமைதி வேண்டும் ஒரு தாயாக அவர் எழுதிய கடிதம் இது. அதில் ‘குழந்தைகளையும், எதிர்காலச் சந்ததியினரையும் பாதுகாக்க இதுதான் நேரம்’ என்று குறிப்பிட்டிருந்தார். ஆகஸ்ட் 15 அன்று அலாஸ்காவில் நடந்த உச்சிமாநாட்டின்போது, டிரம்ப் தனது மனைவியின் கடிதத்தை புதினிடம் நேரடியாக வழங்கினார்.













Add Comment