சமீபத்தில் அமெரிக்காவை உலுக்கிய மூன்று கொலைகள், ‘மாடல் மைனாரிட்டி’ (Model Minority) என்று பெயரெடுத்திருக்கும் அமெரிக்க இந்தியர்கள் தொடர்புடையவை. அமைதியும் அன்பும் நிறைந்த, குடும்ப வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகப் பெயர் பெற்றிருந்த குடும்பங்களில் இவை நிகழ்ந்தன.
பெற்றோருக்கு நல்ல வேலை, கை நிறைய ஊதியம், கேட்டதெல்லாம் கிடைக்கும் வசதியான சூழல், பேரன்பு காட்டும் குடும்பங்கள். குற்றம் சாட்டப்பட்ட இளைஞர்களும் அதீத புத்திசாலிகள். எங்கே உரையாடல் இழை விட்டுப்போனதென்று தெரியவில்லை.
அர்ஜுன், பதினேழு வயது இளைஞன்; பள்ளி இறுதி வகுப்பு மாணவன். அவனது ஆசிரியர்களே அவனுடைய புத்திசாலித்தனத்தை மெச்சுகிறார்கள். யாருடனும் எந்தப் பிணக்கும் இல்லை. ஆனால், படிப்பை நிறுத்திவிட்டுச் சொந்தமாக ஒரு நிறுவனத்தைத் தொடங்க ஆசை கொண்டிருந்திருக்கிறான்.
















Add Comment