நல்ல நண்பர்களுடைய இடத்தை ரோபாட்கள் எடுத்துக் கொள்வது அதிகரித்துக் கொண்டு வருகின்றன. இயந்திரத்துடன் பேசுவது எளிது. ஏனெனில் அது நாம் சொல்வதைக் கேட்டு நம்மை எடை போடாது. நாம் கேட்க விரும்புவதை நமக்குத் திருப்பிச் சொல்ல வல்லது. நமது ரகசியங்களைப் பாதுகாக்கவும் செய்யும். ஆகையால் ரோபாட்கள் இளையோர்களின் நம்பிக்கை உகந்த நண்பர்களாக மாறிவிட்டிருக்கின்றன.
இந்தப் பழக்கம் சீனாவில் அதிகரித்ததால் அந்நாட்டு அரசாங்கமே இப்போது கடிவாளம் போட ஆரம்பித்திருக்கிறது. இந்தத் தடையால் பலர், குறிப்பாகப் பதின்ம வயதினரும் இளையோரும் அச்சம் அடைந்திருக்கின்றனர்.
இயல்பிலேயே மனிதன் கூடி வாழும் விலங்கினத்தைச் சேர்ந்தவன். அதனால்தான் குடும்ப அமைப்புகள், சமுதாய அமைப்புகள் எல்லாம் உருவாகின. இன்றும் அவை இருந்தபோதும், உணர்வு ரீதியாகத் தனிமைப்படுத்தப்பட்ட மக்களே அதிகம்.
தனிமை உணர்வு மிக மோசமானது. மிகக் கொடூரமான குற்றங்களுக்கே தனிமைச் சிறை உச்சகட்ட தண்டனையாக வழங்கப்படுகிறது. அப்படியிருக்க, சாதாரண அன்றாட வாழ்க்கையில் நம்மை நாமே தனிமைப்படுத்திக் கொள்வது எத்தனை அபாயகரமானது?
















Add Comment