இந்தியப் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் பைடனின் சந்திப்பு பல எதிர்ப்புக் குரல்களுக்கு இடையே ஒருவாறாக நடந்து முடிந்தது.
அமெரிக்காவிற்கு, அமெரிக்க அதிபர்களுடைய அழைப்பை ஏற்றுப் பல பாரதப் பிரதமர்கள் இதற்குமுன் வந்து காங்கிரசில் பேசிவிட்டு, வெள்ளை மாளிகையில் விருந்துண்டு சென்றிருக்கிறார்கள். அதிபர் கென்னடியின் அழைப்பின் பேரில் பிரதமர் நேரு, அதிபர் நிக்சன் மற்றும் அதிபர் ரேகன் அழைப்பின் பேரில் பிரதமர் இந்திரா காந்தி, அதிபர் ரேகனின் அழைப்பின் பேரில் பிரதமர் ராஜிவ்காந்தி, அதிபர் ஃபோர்டின் அழைப்பின் பேரில் பிரதமர் மொரார்ஜிதேசாய், அதிபர் பில் கிளின்டன் அழைப்பின் பேரில் பிரதமர் வாஜ்பாய், அதிபர் புஷ் அழைப்பை ஏற்று அதிபர் மன்மோகன் சிங் , பிறகு அதிபர் ஒபாமாவின் அழைப்பை ஏற்று மன்மோஹன் சிங் எனப் பலரும் வந்திருக்கிறார்கள். காங்கிரஸ் செனேட் கூட்டத்திலும் வாஜ்பாய் போன்றோர் உரையாற்றியிருக்கிறார்கள். இந்திரா காந்தி போன்றோர் ஆணித்தரமாக இந்தியாவின் ரஷ்யா சார்பையும் இந்தியா போன்ற நாடு அமெரிக்காவையும் சார்ந்திருக்க வேண்டிய தேவையையும் சொல்லியே சென்றிருக்கிறார்கள்.
Add Comment