சிறிது காலமாகக் காஷ்மீரில் பெரிய தீவிரவாதத் தாக்குதல் சம்பவங்கள் இல்லாமல் இருந்தன. மீண்டும் இப்போது தலையெடுக்கத் தொடங்கியிருப்பது கவலையளிக்கிறது.
செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 22, 2025) பிற்பகல் அனந்தநாக் மாவட்டத்தில், சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகிற பஹல்காமில் உள்ள பைஸாராம் என்ற பகுதியில் இரண்டு தீவிரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் இருபத்தாறு பேர் (ஏப்ரல் 22, இரவு 11.40 மணி நிலவரப்படி) இறந்திருக்கிறார்கள். இன்னும் பலர் காயமுற்று மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்கள். கொல்வதற்கு முன் அவர்கள் ஒவ்வொருவருடைய பெயரையும் கேட்டதாகவும் இறந்தவர்கள் அனைவரும் இந்துக்கள் என்றும் செய்தி ஊடகங்கள் திரும்பத் திரும்பச் சொல்லத் தொடங்கின. ஆனால் பட்டியலில் இத்தாலி, இஸ்ரேலைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகளும் இருக்கிறார்கள்.
இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றிருக்கும் The Residence Front (TRF) என்கிற அமைப்பு, 2019 ஆம் ஆண்டு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்பு உருவாக்கப்பட்ட ஒன்று. பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீர் பகுதிகளிலிருந்து செயலாற்றும் லஷ்கர் ஏ தொய்பாவின் நிழல் அமைப்பு. 2020 ஆவது ஆண்டில் பதிநான்கு தாக்குதல் சம்பவங்கள், 2021 இல் ஒன்பது தாக்குதல் சம்பவங்கள், 2023 இல் ஒரு சம்பவம் என்பது இந்த அமைப்பின் கணக்கில் எழுதப்பட்டிருக்கிற புள்ளிவிவரங்கள்.
Add Comment