கவிதா ராமு; புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர். வந்திதா பாண்டே; மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர். இருவரும் இணைந்து இரட்டைக்குழல் துப்பாக்கியாகச் செயல்பட்டுக் கொண்டிருப்பதை அனைவரும் மனமுவந்து பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
கடந்த டிசம்பர் ஏழாம்தேதி, மாற்றுத் திறனாளிகளுக்கான மனுநீதி நாள். அப்போது அனைவரிடமும் அவர்கள் அமர்ந்திருந்த இருக்கைகளுக்கருகிலேயே சென்று மனுக்களைப் பெற்றுக் கொண்டார் ஆட்சியர் கவிதா ராமு. அவருடைய இந்த எளிமை கண்டு மக்கள் வியந்து போயினர்.
இன்றும் இப்படி வழும் சில ஆதிக்க சமூக சாதியினரின் மனநிலையை பார்த்தாலாவாது பெரியார் எதை எதிர்த்து யாருக்காக போராடினார் என்பது புரிய வேண்டும். பெரியாருடைய கடவுள் மறுப்பு கொள்கையை மட்டும் எதிர்த்து ஆன்மீக அரசியல் செய்யும் மத வியாபாரிகள் இதை பேச மாட்டார்கள் !!!!! . இந்த சாதிய பாகுபாடுகளின் தொடக்கம் கோயில்களாகவே இருந்து !!!! பெரியார் கடவுளையும்எதிர்க்க தொடங்கினார்