Home » தாகத்தில் தவிக்கும் தலைநகரம்
இந்தியா

தாகத்தில் தவிக்கும் தலைநகரம்

தீராத பற்றாக்குறை

தண்ணீர்த் தட்டுப்பாடு என்பது ஒவ்வோராண்டு கோடையின் போதும் டெல்லி மக்கள் சந்திக்கும் பிரச்சனை. ஆம் ஆத்மி, பி.ஜே.பி. சண்டையில் நாடு முழுக்க அதைப் பற்றித் தெரிய வந்திருக்கிறது. இதில் சூரியனுக்கு இருக்கும் பங்கையும் குறைத்து மதிப்பிட முடியாது.

இந்த ஆண்டு கோடையின் தாக்கம் அதிகம். வட இந்திய மாநிலங்களில் வெப்ப அலையால் பலர் உயிரிழந்துள்ளனர். வெப்பம் தாக்கி வருபவர்களுக்கு என மருத்துவமனைகள் குளியல் தொட்டியில் தண்ணீர் நிரப்பி அவசர சிகிச்சை மையங்களைத் திறந்து கொண்டுள்ளன. இந்தியாவில் இருபது பெரு நகரங்களில் தண்ணீர்த் தட்டுப்பாடு உச்சத்தில் இருக்கிறது. இந்தியா முழுக்க மின்சாரம், தண்ணீர்ப் பயன்பாடு வெப்பத்தால் அதிகரித்துள்ளது. அரசு கொடுக்கும் அறிவுரை நிறையத் தண்ணீர் குடியுங்கள் என்பதுதான். அறிவுரை கொடுப்பதோடு தண்ணீர் கொடுப்பதும் அவர்கள் கடமையல்லவா?

டெல்லியின் தண்ணீர்ச் சிக்கல் கால் நூற்றாண்டுக்கும் மேலாக இருக்கும் ஒன்று. தங்களுடைய தண்ணீர்த் தேவைக்கு அண்டை மாநிலங்களையே பெரிதும் நம்பியிருக்கிறது. யமுனை, கங்கை இரு நதிகளில் இருந்து நீரைப் பெறுகிறது டெல்லி. முனக் கேரியர் லைன்டு கேனல் (CLC) , டெல்லி துணை கிளைக் கால்வாய், முத்ரா நகர் கங்கைக் கால்வாய் மூலம் பெறப்படும் நீர் ஒன்பது சுத்திகரிப்பு நிலையங்களுக்குச் சென்று சேகரமாகிறது. அங்கிருந்து டெல்லியின் அனைத்துப் பகுதிகளுக்கும் விநியோகிக்கப்படுகிறது.

ஹரியானா தண்ணீரை டெல்லியுடன் பங்கிட்டுக் கொள்ளும் ஒப்பந்தம் இருக்கிறது. சுமார் முப்பதாண்டுகளாக இந்த எண் மாறவே இல்லை. ஹரியானா சரியான முறையில் நீர் தருவதில்லை என்று நீதிமன்றத்தில் முறையிட்டு 1996-ஆம் ஆண்டில் நீர் முறையாக கொடுக்க வலியுறுத்தி தீர்ப்பு வந்தது. அதன் பிறகும் பலமுறை நீதிமன்றத்தை நாடியுள்ளது டெல்லி. 2021-ஆம் ஆண்டு டெல்லி இப்படி அடிக்கடி மனுத்தாக்கல் செய்யக்கூடாது என்று எச்சரித்தும் உள்ளது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!