89. வாலாட்டிய ஜுனாகட்
அமெரிக்காவின் விடுதலைக்குப் பாடுபட்ட ஜார்ஜ் வாஷிங்டன் அமெரிக்கா விடுதலை அடைந்தபோது அதன் முதல் ஜனாதிபதி ஆனார். அயர்லாந்தின் விடுதலைக்குப் பாடுபட்ட டிவேரலா அந்நாடு விடுதலை அடைந்தவுடன் ஜனாதிபதியாகப் பதவி ஏற்றார். சோவியத் ருஷ்யா மலர்ந்தபோது, அதற்குக் காரணமான புரட்சி வீரர் லெனின் ருஷ்யாவின் பிரதமர் ஆனார்.
இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்தபோது, அதற்குக் காரணகர்த்தாவான முகமது அலி ஜின்னா அதன் கர்னர் ஜெனரல் ஆனார். ஆனால், இந்திய சுதந்திரப் போராட்டத்தை முன்னின்று நடத்தி, வெள்ளையரை வெளியேற்றிய காந்திஜி சுதந்திர இந்தியாவில் எந்தவொரு பதவியையும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது எத்தனை பெரிய தியாகம்!
அது மட்டுமா? நள்ளிரவில் பெற்ற சுதந்திரத்தை டெல்லி கோலாகமாகக் கொண்டாடிக் கொண்டிருந்த நேரத்தில் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் சூத்திரதாரியான காந்திஜி கல்கத்தாவில் இருந்தார்.
Add Comment