25. எந்த விலை நல்ல விலை?
எங்கள் வீட்டருகில் ஓர் உணவகம். அதில் மூன்று பிரிவுகள்:
* முதல் பிரிவு, Self Service, அதாவது, நமக்கு நாமே திட்டம். உணவைப் பரிமாறுவதற்கெல்லாம் யாரும் இருக்கமாட்டார்கள். சமைக்கும் இடத்துக்கு அருகில் சென்று நாமே உணவை வாங்கிக்கொள்ளவேண்டும். அந்தத் தட்டை வைத்துச் சாப்பிடுவதற்கு உயரமான மேசைகள் இருக்கும், ஆனால் நாற்காலிகள் கிடையாது. நின்றபடிதான் சாப்பிடவேண்டும்.
* இரண்டாவது பிரிவு, Service, அதாவது, நமக்கு அவர்கள் உணவு பரிமாறுவார்கள். பிளாஸ்டிக் நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு பொறுமையாகச் சாப்பிடலாம்.
* மூன்றாவது பிரிவு, Air-conditioned, அதாவது, குளுகுளு அறையில், மெத்மெத் நாற்காலியில் வசதியாகச் சாப்பிடலாம்.
ஆனால், இந்த மூன்று பிரிவுகளுக்கும் சமையலறை ஒன்றுதான். அதாவது, ஒரே இட்லி, தோசை, சப்பாத்தியைத்தான் மூன்று வெவ்வேறு இடங்களில் வெவ்வேறுவிதமாக வழங்குகிறார்கள். அதற்கேற்ப வெவ்வேறு விலை வைக்கிறார்கள்.
Add Comment