உங்க ஊரில் மயில் குரைத்ததா? எங்கள் ஊரில் யானை ஊளையிட்டது.
‘கோட் – வேர்ட்’ கரெக்ட் என்று கூறி பெட்டிகளை மாற்றிக் கொண்டு எவ்வளவு கம்பீரமாக வாழ்ந்து வந்தார்கள் கள்ளக் கடத்தல்காரர்கள். சென்ற நூற்றாண்டோடு அவர்களின் பொற்காலம் முடிந்துவிட்டது. கோட் – வேர்ட் கடத்தல்காரர்களை விட அதிக அளவு அர்த்தமற்ற சொற்கள் இப்போது குடும்பம் நடத்தவே தேவைப்படுகிறது. குடும்பத் தலைவர்கள் தலைவிகள் எல்லாம் பர்ஸை மறந்துவிட்டுக் கூட அலுவலகம் போக முடியும். பாஸ்வேர்டை மறந்துவிட்டுப் போக முடியாது.
பாஸ்வோர்ட் திலகம்!
விஸ்வநாதன்