Home » ரகசியம், பரம ரகசியம் – 26
நாள்தோறும் • ரகசியம்

ரகசியம், பரம ரகசியம் – 26

தயங்காதே தவறாதே

ஒரு செயலைத் தொடங்கும் முன் யோசிக்க வேண்டும். நன்றாகத் திட்டமிட வேண்டும். தேவையான தகவல்களைச் சேகரித்துக்கொள்ளுதல் நலம். நன்மை தீமைகளை. ஆராய்தல் அவசியம். நம்பிக்கையானவர்களிடம் ஆலோசனை கேட்டுத் திருத்தங்கள் செய்யலாம். இவை எல்லாம் தொடக்கத்துக்கு முன்பே நடக்க வேண்டும். திட்டம் முடிந்ததும் தீர்மானம் எடுக்கலாம். பிறகு நம்பிக்கையுடன் செயலில் இறங்க வேண்டும்.

அதன்பின் மீண்டும் மீண்டும் சிந்திப்பது தவறு. ஒவ்வொரு அடியிலும் சந்தேகிப்பதும் தவறு. நம் மீது நமக்கே நம்பிக்கை இல்லாதபோது வேறு யாருக்கு நம்பிக்கை வரும்? அதுவும் குழுத் தலைவராக இருந்தால், நம் குழுவை நம்பிக்கையோடு வழிநடத்துதல் நம் கடமை அல்லவா? நேரான எண்ணங்கள், நல்ல அதிர்வலைகளை ஏற்படுத்தும். ஆக்கப்பூர்வமான சக்திக்கும் வழி வகுக்கும்.

வீட்டில் ஒரு விசேஷத்துக்குச் சமைக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். என்ன சமைப்பது என்று முதலிலேயே முடிவு செய்கிறோம். தேவையான பொருட்களை வாங்கி வைக்கிறோம். அடுப்பை ஏற்றிய பிறகு திட்டத்தை மாற்றலாமா? பாதி கொதித்த குழம்பை மாற்றினால் என்ன ஆகும்? நேரம் வீணாகும், பொருட்கள் வீணாகும், மனமும் குழம்பும். விருந்தினர் வருவதற்குள் எதுவும் தயாராகாது. தீர்மானத்துடன் சமைத்தால் சமையல் சுவையாகவே அமையும்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!