177. இல்லாதவன்
அன்றைக்கு அதிகாலை முதல் யாமப் பொழுதில், தஞ்சப்புரியில் தனக்கிருந்த வேப்பங்காட்டுக் குடிசைக்குள் உதுமானி நாயனாருடன் படுத்து உறங்கிக்கொண்டிருந்த சார்வாகனுக்கு, உறக்கத்தினிடையே கருவூர்ச் சித்தர் வந்து,
எழுந்து நமது படித்துறைக்கு வா,
என்று உத்தரவிட்டார். அவன் கண் விழித்து எழுந்து அமர்ந்த அதே சமயத்தில் நாயனாரும் உறக்கம் கலைந்து எழுந்ததைக் கண்டவன்,
என்னை உங்கள் குருநாதர் அழைத்தார். உங்களை யார் அழைத்தார்கள்?
என்று கேட்டான்.
அவரேதான். புறப்படுவோம் வா என்று நாயனார் சொன்னார்.
நேற்றெல்லாம் கால் கடுக்க நடந்திருக்கிறோம். நிம்மதியாகப் படுத்துறங்க விடுகிறாரா பாரும்.
சலித்துக்கொண்டே எழுந்தான். நாயனார் புன்னகை செய்தார்.











Add Comment