‘ஹரியானாவில் மிகப் பெரிய வாக்காளர் மோசடி நடந்துள்ளது. இரண்டு கோடி வாக்காளர்களில் இருபத்தைந்து லட்சம் வாக்காளர்கள் போலியானவர்கள்.’ என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியிருக்கிறார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹரியானா மாநில சட்டமன்றத் தேர்தலும், உத்தரப் பிரதேசத்தில் இரண்டு கட்டங்களாக இடைத்தேர்தல்களும் நடைபெற்றன. ஹரியானா சட்டமன்றத் தேர்தலில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில்கூட காங்கிரஸ் வெற்றி பெறும் என்று கூறப்பட்டது. மாறாக, பாஜக நாற்பத்தெட்டு தொகுதிகளிலும், காங்கிரஸ் முப்பத்தேழு தொகுதிகளிலும், இதர கட்சிகள் ஐந்து இடங்களிலும் வெற்றி பெற்றன. பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது. அக்கட்சியைச் சேர்ந்த நயாப் சிங் சைனி முதலமைச்சராகப் பதவியேற்றார்.
உத்தரப் பிரதேசத்தில் பதிமூன்று தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது. அவற்றில் எட்டு தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. இரண்டு மாநிலங்களிலும் மிகப் பெரிய வாக்காளர் முறைகேடுகள் நடந்துள்ளதாக டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.














Add Comment