கிழக்கு லடாக்கில் உள்ள நியோமாவில், போருக்கான அனைத்து வசதிகளையும் கொண்ட உலகின் மிக உயரமான விமானத்தளத்தை இந்தியா திறந்துள்ளது. சுமார் பதிமூன்றாயிரம் அடி உயரத்தில் சீன எல்லையை நோக்கியபடி அமைக்கப்பட்டுள்ள இந்த விமானத்தளம், அசல் கட்டுப்பாட்டுக் கோட்டிலிருந்து (LAC) வெறும் இருபத்து நான்கு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்தத் தளத்தின் மூலம் சீனாவின் நகர்வுகளை இந்தியா இனி நேரடியாகக் கண்காணிக்கலாம்.
சீன ராணுவம் எளிதில் ஊடுருவும் பகுதிகளான பெங்காங்க் சோ, டெம்சோக், டெப்சாக் போன்ற பகுதிகளுக்கு இங்கிருந்து ஆயுதங்களையும் துருப்புகளையும் விரைந்து அனுப்ப முடியும். மேலும் நியோமாவிலிருந்தும் அனைத்துவிதமான ஆயுதங்களையும் கையாள முடியும். கனரக விமானங்கள், போக்குவரத்து விமானங்கள், போர் விமானங்கள் என அனைத்து வகை விமானங்களையும் இயக்கவும் நிலைநிறுத்தவும் ஏற்றதாக இந்தத் தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
1962ஆம் ஆண்டு இந்திய-சீனப் போர் சமயத்தில் அவசர உபயோகத்துக்குத் திறக்கப்பட்டது நியோமா விமான நிலையம். இருப்பினும், 2009ஆம் ஆண்டு வரை பயன்படுத்தப்படாமல் இருந்தது. பின்னர் விமானப்படையின் உள்பயன்பாட்டுக்கு மட்டும் உபயோகிக்கப்பட்டது. லடாக்கில் கார்கில், லே, தோய்ஸில் ஆகிய பகுதிகளில் ஏற்கெனவே விமானத்தளங்கள் செயல்பாட்டில் உள்ளன. இருப்பினும் அந்த விமானத்தளங்களைவிட நியோமா அதிகமான வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது.















Add Comment