உடலின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் ஊசி குத்திக்கொள்ளும் திருவிழாவிற்குப் பெயர்தான் செடல்.
நாக்கில் குத்திக்கொள்வதை ‘அலகு குத்துதல்’ என்பது வழக்கம். இது அப்படியில்லை. நாக்கு, கருவிழி, வெண்விழி தவிர்த்து உடலின் அனைத்து பாகங்களிலும் மெல்லிய ஊசியால் குத்திக்கொள்வதே செடல்.
கடலூர் மாவட்டத்திற்கு மல்லாட்டை (மணிலா) என்ற வட்டார வழக்கு தனித்துவமானது. அதேபோலத் தான் செடல் திருவிழாவும். விருத்தாசலம், கடலூர், புதுவையில் உள்ள குறிப்பிட்ட சில அம்மன் கோவில்களில் மட்டும் இந்தச் செடல் திருவிழா நடக்கும். இதில் குறிப்பிட்டு சொல்லும்படியானது குறிஞ்சிப்பாடி புத்துமாரியம்மன் கோவில் செடல் திருவிழா தான்.
Add Comment