Home » திருவிழா

Tag - திருவிழா

திருவிழா

எங்கே அந்தப் பதினெட்டு லட்சம் பேர்?

நான்கு நாள் பொங்கல் பண்டிகையின் இறுதி நாளான காணும் பொங்கல், கொண்டாட்டமும் குதூகலமும் நிறைந்தது. பழையன கழித்து , புதுப்பொங்கல் வைத்து, மாட்டை வணங்கி அல்லது விரட்டிப் பிடித்து முடித்த பின்னர் குடும்பத்துடன் சிற்றுலா செல்லும் நாளே காணும் பொங்கல். சோழர் காலத்துக்குப் பிந்தைய அல்லது சுதந்தரம் அடைவதற்கு...

Read More
திருவிழா

பூதகோலா

கர்நாடகாவின் தெற்குப் பகுதி கிராமங்களிலும், கேரளாவின் எல்லையோரக் கிராமப்புறங்களிலும் பூதகோலா மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. பாரம்பரியமான இந்த நிகழ்ச்சிக்குப் பல நூற்றாண்டுப் பின்னணி உள்ளது. மேலோட்டமாக பார்க்கும்போது பூதகோலா ஒரு வழிபாட்டு நிகழ்வு எனத் தோன்றினாலும், இதனுள் நடனம், இசை, பரவசம்...

Read More
திருவிழா

கந்தசஷ்டியும் மிளகு விரதமும்

தமிழகத்தில், குறிப்பாக, தென் தமிழகத்தில் புகழ்பெற்றது சூரசம்ஹாரத் திருவிழா. திருச்செந்தூரில் நடைபெறும் மகாசஷ்டித் திருவிழாவின் முக்கியமான அம்சம். இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 22ஆம் தேதி தொடங்கும் இந்த விழா, 28ஆம் தேதிவரை நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் 27ஆம் தேதி நடைபெற இருக்கிறது...

Read More
திருவிழா

அகிலம் கொண்டாடும் ஆடி

தமிழகத்தைப் பொறுத்தவரை ஆடி மாதம் என்பது பண்டிகைகளின் மாதம். ஒவ்வொரு நாளும் மக்கள் கொண்டாட ஏதாவதொரு விசேஷம் இருக்கும். ஆடிச் செவ்வாய், வெள்ளி, கிருத்திகை, பூரம், பெருக்கு எனப் பலவிதமான கொண்டாட்டங்கள். ஆடிப் பதினெட்டு அன்று நடைபெறும் ஆடிப்பெருக்கு, நதியோர மாவட்டங்களில் இன்னும் சிறப்பாகக்...

Read More
திருவிழா

சூப்பர் ஹீரோ அழகர்

“வாராரு வாராரு அழகரு வாராரு” என்ற தேவாவின் திரைப்பாடலும், வைகைக் கரையின் முழங்கால் மட்ட நீரில் இளைஞர்கள் நடனமாடும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸும்தான் இப்போதெல்லாம் சித்திரைத் திருவிழா என்றதும் நினைவில் வருகிறது. இன்ஸ்டாகிராம் காலத்திற்கு முன்பே மதுரையும் அழகரும் பரிச்சயம் என்பதால் வேறு...

Read More
திருவிழா

பரவசப் பெருவிழா

சில நூற்றாண்டுகள் பாரம்பரியம் கொண்ட மயிலாப்பூர் பங்குனிப்பெருவிழாவும், அறுபத்து மூவர் உற்சவமும் இந்த வாரம் நிறைவுற்றது. என்ன விசேஷம் இந்தத் திருவிழாவில்? ஏன் இதற்கு வரலாற்று முக்கியத்துவம்? பங்குனிப் பெருவிழாவில் என்னென்ன விசேஷங்கள் நடக்கின்றன? மயிலாப்பூரில் உள்ள கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர்...

Read More
திருவிழா

அரோகரா!

வசந்த பஞ்சமி, அக்ஷயத் திருதியை மாதிரி தமிழ்நாட்டில் திடீர் பிரபலம் அடைந்த கொண்டாட்டம் போலல்லாது, தொன்றுதொட்டு வரும் பண்டிகை தைப்பூசம். தமிழர் அதிகம் வாழும் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பொங்கல், தீபாவளியைப் போலவே தைப் பூசமும் மிக முக்கியமான பண்டிகை. தமிழ்க் கடவுளான முருகப் பெருமானின்...

Read More
திருவிழா

பலூன் இருக்கு, பாத்ரூம் இல்லை!

சென்னை கிழக்குக் கடற்கரைச்சாலையில் கோவளத்தை அடுத்த திருவிடந்தையில் சர்வதேச பலூன் திருவிழா ஜனவரி 10ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை மூன்று நாள்கள் நடந்தன. பல நாடுகளிலுமிருந்து வந்திருந்த கலைஞர்கள் இந்தத் திருவிழாவில் கலந்துகொண்டனர். பிரான்ஸ், ஆஸ்திரியா, ஜப்பான், பிரேசில், பெல்ஜியம் ஆகிய இருபது...

Read More
திருவிழா

ஒரு ஊர்ல ஒரு உலகம்

ஐக்கிய அமீரகத்துக்கு நவம்பர் என்றால் வசந்த காலம். நான்கு , ஐந்து மாதங்கள் தொடரும் குளிர்காலத்தில் விடுமுறைகளும் திருவிழாக்களும் களைக்கட்டும். அதில் மிக முக்கியமானது குளோபல் வில்லேஜ் மேளா. குளோபல் வில்லேஜ் போகும் பார்வையாளர்களுக்கு உலக நாடுகளைச் சுற்றிப் பார்த்த பரவசம் கிடைத்துவிடும். ஒரே இடத்தில்...

Read More
திருவிழா

அப்பனே முருகா!

“இந்த அரசு எந்த நம்பிக்கைக்கும் எதிரானது அல்ல. திராவிட மாடல் அரசு என்றாலே மக்கள் நம்பிக்கைக்குத் தீங்கு நினைக்காத அனைத்து நம்பிக்கைகளையும் மதிக்கும் அரசு என்று தான் பொருள். சக்தித் தலங்கள் தரிசனம், அறுபடை வீடுகள் தரிசனம், காசி யாத்திரையென அனைத்தையும் ஏற்பாடு செய்யும் அரசு இது. இதன் மூலம்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!