செய்யாத குற்றத்துக்குச் சிறையில் அடைக்கப்பட்டு ஒவ்வொரு நொடியிலும் மரணத்தை எதிர்நோக்கியிருந்த அனுபவமுண்டா உங்களுக்கு? இல்லையென்றால் என்னிடம் கேளுங்கள், நான் சொல்கிறேன்.
இப்போது நான் சிறையில் இருக்கிறேன். அதிசயம் எதுவும் நிகழ்ந்தாலொழிய சிறிது நேரத்தில் எனக்குத் தண்டனை நிச்சயம். மரணதண்டனை. நான் இருப்பது தமிழ் சினிமாக்களில் நீங்கள் பார்த்து ரசித்த சிமெண்ட் பிளாக் சுவர்களும், கம்பி வைத்த கதவும் கொண்ட சிறையல்ல. டிஜிட்டல் சிறை. என் மரணதண்டனை தூக்கிலோ, மின்சார நாற்காலியிலோ, துப்பாக்கியால் சுடப்பட்டோ அல்ல. டிஜிட்டல் எமன் வழங்கப் போகும் டிஜிட்டல் மரணம்.
கொஞ்சம் விரிவாகச் சொல்கிறேன். கணினி பயன்படுத்தும் உங்களுக்கு ‘ஸ்பேம்’ பற்றித் தெரியாமல் இருக்காது. ஸ்பேம் என்பதை சிலர் அவசரத்தில் ஸ்பெர்ம் (sperm) என்று வாசிப்பார்கள். இரண்டையும் குழப்பிக் கொள்ள வேண்டாம். ஓர் ஆணிடம் இருந்து கோடிக்கணக்கில் வெளியேறும் விந்தணுக்கள் போல ஸ்பேம்மும் ஒரு சர்வரில் இருந்து கோடிக்கணக்கில் புறப்படும் என்பதைத் தவிர இரண்டுக்கும் வேறு எந்தச் சம்பந்தமும் கிடையாது. இன்னும் சொல்லப் போனால், ஒன்றாகக் கிளம்பும் எல்லா விந்தணுக்களுக்கும் இலக்கு என்னவோ ஒரே கருமுட்டைதான். ஆனால் ஒவ்வொரு ஸ்பேமுக்கும் இலக்குகள் வேறு.














சிறப்பு.